பெண்களின் குரலில்தான் பாடல் நல்ல உருவம் பெறுகிறது டி.இம்மான்

சென்னை : ஜீவா நடிப்பில் பிப்ரவரி 7 வெளியாக இருக்கும் படம் தான் சீறு .இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான ஐசரிகணேஷ் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரித்து உள்ளார் .எல்.கே.ஜி ,கோமாளி ,பப்பி போன்ற வெற்றி படங்களை அடுத்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார் ஐசரிகணேஷ் .இந்த படத்தை இயக்கி இருக்கிறார் றெக்க பட இயக்குனர் ரத்னசிவா .

இந்த படத்தின் இசையைமைப்பாளர் டி.இம்மான், இவரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது .முக்கியமாக செவ்வந்தியே பாடல் பெரிய வெற்றியை தொட்டு உள்ளது ,இந்த பாடலை கண் தெரியாத பாடகர் திருமூர்த்தி பாடியிருந்தார் ,சினிமாவில் அவருக்கு இதுதான் முதல் பாடல் ,டி.இம்மான் திருமூர்த்தியை அறிமுகப்படுத்தியதை போல பல திறமை மிகுந்த கலைஞர்ளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

d.imman speech in press meet of seeru movie

இந்த படத்தின் இசை நன்றாக வருவதற்கு முதல் காரணம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் என டி.இம்மான் கூறியிருக்கிறார்.வேல்ஸ் தயாரிப்பில் இதற்கு முன்பே போகன் படத்தின் பணியாற்றியுள்ளேன் தயாரிப்பு ரீதியில் மிக நல்ல நிறுவனம் என கூறியுள்ளார்.

இந்த படத்தில் முதல்முறையாக வருன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் .இதற்காக வருன் மிக கடின உழைப்பை கொடுத்திருப்பதாக டி.இம்மான் படத்தின் சார்பில் நடந்த விழாவில் குறிப்பிட்டு இருந்தார் .

d.imman speech in press meet of seeru movie
டி.இம்மான் கடந்த சில வருடங்களாக மிகவும் அதிகபடியான ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இசையைமைப்பாளர் .இவர் இசையில் அதிகம் ஹிட் அடித்தது குத்து பாடல்கள் தான் ,இதற்கடுத்து மெல்லிசைகளுக்கும் நல்ல வெற்றியை பெற்றவை .இவர் விழாவின் போது கூறுகையில் இயக்குனர் ரத்னசிவாவுடன் பணியாற்றும் போது அதிக படியான பெண் பாடகர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது மற்ற இயக்குனர்களுடன் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என கூறினார் .மேலும் பெண்களின் குரலில்தான் பாடல் முழு உருவம் அடைகிறது ரத்னசிவா இயக்கத்தில் தான் இது சாத்தியம் அதற்காக ரத்ன சிவாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார் டி.இம்மான் .
d.imman speech in press meet of seeru movie

எப்போதும் பாடல் யூடியூப்பில் வெளியாகும் முன்பு சோனி நிறுவனத்துக்கு தொல்லை கொடுத்து விடுவாராம் டி.இம்மான் .பாடல்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யபடுகிறதா என்ற பதட்டமே அதற்கு காரணம் என பகிர்ந்து கொண்டார் .இந்த படத்தின் ஒரு பாடலின் வரிகளை ஆர்.ஜே.விஜய் எழுதி அதில் வரும் சில வரிகலை பாடலின் இடையே அவரே பாடியிருப்பதாகவும் கூறினார் .ஆர். ஜே.விஜய் சமீப காலமாக பல படங்களில் பாடலாசிரியராக பணியாற்றி வருகிறார் .நல்ல பாடலாசியிராக வளர்ந்து வருகிறார் ஆர்.ஜே.விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X