பிடித்த காதலி மனைவியாவதில்லை.. மனைவி பிடித்த காதலியாவதில்லை.. டி. இமான் என்ன இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: பார்த்திபனின் டீன்ஸ் படத்துக்கு இசையமைத்துள்ள டி. இமான் படத்துக்கும் தனக்கும் கிடைத்துள்ள அங்கீகாரத்தால் சந்தோஷத்தில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். வசூல் ரீதியாக முதல் நாளில் 7 லட்சம் மட்டுமே வசூல் செய்த டீன்ஸ் திரைப்படம் தற்போது 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பார்த்திபனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான படமாக டீன்ஸ் படம் உருவாகியுள்ளது. முதல் பாதியில் ஹாரர் படம் போல செல்லும் கதை இரண்டாம் பாதியில் ஏலியன் கதையாக மாறும் நிலையில், அந்த படத்தின் இசையமைப்பாளரான இமானுக்கே இரண்டாம் பாதி கதையை பார்த்திபன் சொல்லவில்லை என்கிறார்.

D Imman Teenz interview

வாழ்க்கையே நினைத்தது போல அமைவதில்லை. சினிமா மட்டும் அப்படி அமைந்து விடுமா என பர்சனல் விஷயங்களையும் டச் செய்து டி. இமான் அளித்துள்ள பேட்டி சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

பார்த்திபன் கதையே சொல்லல: சில இயக்குநர்கள் மியூசிக் போட சொல்லி வரும் போது, இதே போல 2ம் பாதி கதையையே சொல்ல மாட்டார்கள். சில இயக்குநர்களிடம் 2ம் பாதி கதையே இருக்காது என்பது போக போக தெரிந்துக் கொண்டேன். ஆரம்பத்தில் பார்த்திபன் சார் சொல்லும் போது கூட, இனிமேல் தான் 2ம் பாதியை மனுஷன் உருவாக்கப் போகிறார் என தப்பாக கணக்குப் போட்டேன். ஆனால், கடைசியில் எனக்கே அவர் ட்விஸ்ட் கொடுத்து விட்டார் என டி. இமான் டீன்ஸ் படத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வேலை பார்த்தது பற்றி பேசியுள்ளார்.

மனைவியும் காதலியும்: நமக்கு பிடித்த காதலி மனைவி ஆவார் என்றால் அது சந்தேகம் தான். அதே போல நாம் கட்டும் மனைவி நல்ல காதலியாகவும் நமக்குப் பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை. நம்முடைய பிள்ளைகள் நம் செல்வம் என வளர்க்கிறோம். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அது மாறிவிடுகிறது. நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்கள் அமைவதில்லை. நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. இசைத்துறையில் சாதாரண ஒரு கலைஞராக நானிருந்தாலே போதும் என நினைத்தேன். ஆனால், இசையமைப்பாளராக இருக்கும் வாய்ப்பை அந்த கடவுள் கொடுத்துள்ளார் எனக்கூறியுள்ளார்.

குவியும் வாய்ப்புகள்: சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சினிமாவில் பெரிதாக டி. இமானுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. பார்த்திபன் டீன்ஸ் படத்தில் இசையமைக்க வாய்ப்புக் கொடுத்த நிலையில், தொடர்ந்து தற்போது இமானுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறியுள்ளார். சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்துக்கு இசையமைத்த இமான் அடுத்ததாக மலை, பப்ளிக், வள்ளி மயில் மற்றும் பேட்ட ராப் என 4 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X