For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாதனை இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு 54வது பிறந்தநாள் - டிஎஸ்ஆர் சுபாஷ் வாழ்த்து

|

சென்னை: விஜயகாந்த்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்த அவரது 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி தன்னுடைய 54ஆவது பிறந்த நாளினை வெகுசிறப்பாக கொண்டாடினார். அவருக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் குறிப்பிடத்தக்க சாதனை !

D.S.R.Subash Birthday wishes to R.K.Selvamani 54th Birthday

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த முதல் தலைமுறை மற்றும் இரண்டாம் தலைமுறையின் கதாநாயகர்கள் (தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, டி.ஆர்.மஹாலிங்கம், கே.ஆர்.ராமசாமி) அதிகமான படங்களில் நடிக்கவில்லை. கதாநாயகிகளும் அப்படியே. மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்களே 100 படங்களை கடந்து நடித்தனர்.

அதன்பின் வந்த தலைமுறை நடிகர்களே 100 படங்களைக் கடந்து நடித்து புகழ் பெற்றனர். பல பிரபலமான நடிகர்களின் 100வது படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஒருசில நடிகர்களின் படங்கள் மட்டுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க ஒரு படம் கேப்டன் பிரபாகரன். இப்படம் 1991ஆம் ஆண்டில் வெளியானது. புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின் 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி.

பொதுவாக 100ஆவது படம் பெரிய அளவில் வெற்றி அடையாது என்ற ஒரு சூழல் இருந்த சமயத்தில் இப்படம் வெற்றி பெற்றது.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தை கேப்டன் என்று அழைக்கத் துவங்கினர்.

100ஆவது படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் பற்றிய ஒரு பார்வை

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 100ஆவது படம் ஜெமினி நிறுவனத்தின் ஒளி விளக்கு. இப்படம் 1968ஆம் ஆண்டில் வெளியானது. இயக்கம் சாணக்கியா, இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஏ.பி.நாகராஜனின் நவராத்திரி திரைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான 100ஆவது படம். இப்படம் 1964ஆம் ஆண்டில் வெளியானது. இசை கே.வி.மகாதேவன்.

D.S.R.Subash Birthday wishes to R.K.Selvamani 54th Birthday

காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடிப்பில் சீதா திரைப்படம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967ஆம் ஆண்டில் வெளியானது.

1971ஆம் ஆண்டில் வெளியான கே.பாலசந்தரின் புன்னகை முத்துராமனின் 100ஆவது படமாகும். இசை எம்.எஸ்.வி.

1979ஆம் ஆண்டில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், வெளியான கடவுள் அமைத்த மேடை சிவகுமாரின் 100ஆவது படமாக அமைந்தது.

ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில், டி.ஆர்.பாப்பா இசையில் 1974ஆம் ஆண்டில் வெளியான இதயம் பார்க்கிறது திரைப்படம் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் 100 படமாக வெளியானது.

உலக நாயகன் கமல்ஹாசனின் 100 வது படம் 1981ஆம் ஆண்டில் வெளியான ராஜ பார்வை. இசை இளையராஜா. இயக்கம் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீ ராகவேந்திரா 100ஆவது படமாக அமைந்தது. இயக்கம் எஸ்.பி.முத்துராமன். இசை இளையராஜா.

பி.வாசு இயக்கத்தில் 1989ஆம் ஆண்டு வெளிவந்த வாத்தியார் வீட்டுப் பிள்ளை புரட்சித் தமிழன் சத்யராஜின் நடிப்பில் வெளியான 100ஆவது படமாகும். இசை இளையராஜா. இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டில் வெளியான ராஜகுமாரன் திரைப்படம் இளைய திலகம் பிரபு நடித்த 100ஆவது படமாகும். இசை இளையராஜா.

1999ஆம் ஆண்டு வெளிவந்த மன்னவரு சின்னவரு ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த 100ஆவது படமாகும். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், P.N.ராம்சந்தர் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு இசை கீதப்பிரியன்.

நவரச நாயகன் கார்த்திக் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் விக்ரமன் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியானது. இசை எஸ்.ஏ.ராஜ்குமார்.

இந்த வரிசையில் சரத்குமார், முரளி என பலர் 100 படங்களை கடந்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.

நடிகைகளில் சாவித்திரி, ஷீலா, கே.ஆர்.விஜயா, ஜெயசித்ரா என்று பலர் 100 படங்களை கடந்து நடித்தவர்களின் பட்டியலில் உள்ளனர். பலரின் 100ஆவது படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களின் வரிசையில் அமைந்துள்ள விஜயகாந்த் அவர்களின் 100ஆவது படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்

டி.எஸ்.ஆர்.சுபாஷ்

இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு நம்முடைய ஃபிலிமிபீட் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

English summary
R.K.Selvamani was celebrating his 54th Birthday on 21st October 2019. He has directed Actor cum Politician Vijayakanth’s 100th Film Captain Prabhakaran and it was a milestone in Vijayakanth’s Film Career. Tamilnadu Union of Journalist Association President D.S.R.Subash wishes to R.K.Selvamani.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more