லீக்கான டி40 புகைப்படம்.. தனுஷுக்கு ஜோடி சஞ்சனா நடராஜனா?
Recommended Video
சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்திற்கு பிறகு தனுஷின் டி40 திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு சுருளி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதுவரை டி40 படக்குழுவினர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
சமீபத்தில் தனுஷின் கெடா மீசை லுக் லீக்கான நிலையில், தற்போது இன்னொரு போஸ்டரும் லீக்காகி வைரலாகி வருகிறது.
பேட்ட மீசை
பேட்ட படத்தின் பிளாஷ்பேக் போர்ஷனில் பேட்ட வேலனாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெடா மீசையுடன் நடித்திருப்பார். இந்நிலையில், அதே மீசையுடன் நடிகர் தனுஷ் நடித்து வரும் புகைப்படங்கள் சமீபத்தில் லீக்காகி வைரலானது.
சுருளி
தனுஷின் 40வது படத்தின் தலைப்பு சுருளி என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதுவரை படத்தின் தலைப்பை அறிவிக்கவில்லை. இந்த படத்தில் தனுஷ் சுருளி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
பிளாஷ்பேக் ஜோடி
கெடா மீசையுடன் தனுஷ் மற்றும் அவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் இருக்கும் புதிய போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் லீக்காகி வைரல் ஆகி வருகின்றன. தனுஷ் சுருளி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், வள்ளி எனும் கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் நடித்து வருகிறார்.
சஞ்சனா நடராஜன் யார்
இந்திய மாடல் அழகி மற்றும் நடிகையுமான சஞ்சனா நடராஜன், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் விஜய் தேவரகொண்டாவின் தோழியாகவும் எதிர்கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதியாகவும் நடித்து அசத்தியவர். மேலும், கேம் ஓவர், இறுதிச்சுற்று போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஹீரோயின் யார்?
விஷாலின் ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி தான் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிளாஷ்பேக் போர்ஷனில் தான் சஞ்சனா நடராஜன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். லண்டனில் 60 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், தற்போது மதுரையில் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











