டி40 ஓவர்.. டி41 ஸ்டார்ட்.. வேற லெவல் ஸ்பீடில் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த டி40 படத்தின் ஷூட்டிங்கை கடந்த டிசம்பர் 30ம் தேதி நிறைவு செய்த நடிகர் தனுஷ், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி41 படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள டி41 படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியில் இன்று தொடங்கியுள்ளது.

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

பட்டாஸ் பொங்கல்

பட்டாஸ் பொங்கல்

அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த எனை நோக்கிப் பாயும் தோட்டா வெளியானது. அதன் பிறகு வரும் பொங்கலுக்கு துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் டபுள் ஆக்‌ஷனில் கலக்கியுள்ள பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகாவும் மகன் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சடாவும் நடித்துள்ளனர்.

மாமனாருடன் மோதல்

மாமனாருடன் மோதல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு அடுத்த வாரமே பொங்கல் பண்டிகையன்று தனுஷின் பட்டாஸ் திரைக்கு வருகிறது. தர்பார் படத்துக்கு சரியான போட்டியாக இரண்டாவது வாரத்தில் இருந்து தனுஷின் பட்டாஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம ஸ்பீடு

செம ஸ்பீடு

டி40 முதல் டி41 வரை வரிசைக் கட்டி நடிகர் தனுஷுக்கு படங்கள் காத்திருப்பதால், செம ஸ்பீடாக ஒவ்வொரு படத்தையும் நடித்து கொடுத்து அடுத்த படத்திற்கு சென்று விடுகிறார் தனுஷ். அசுரன் படத்திற்கு பிறகு, பட்டாஸ் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் டி40 என இரு படங்களை முடித்துள்ள தனுஷ், ஓய்வின்றி உடனடியாக டி41 படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

வைரலாகும் புகைப்படம்

பரியேறும் பெருமாள் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. திருநெல்வேலியில் தற்போது டி41 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

கர்ணன்

மேலும், இந்த படத்திற்கு 'கர்ணன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரபல மலையாள நடிகர் லால் மற்றும் 'நட்டி' நடராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள ஹீரோயின்

மலையாள ஹீரோயின்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் மலையாள லேடி சூப்பர்ஸ்டார் நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது தனுஷ் நடித்து வரும் டி41 படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

டி41 படத்தை முடித்த கையுடன் நடிகர் தனுஷ் ராட்சசன் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2020 மற்றும் 2021 வரை தனுஷின் கால்ஷீட் ஃபுல் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X