டி43 படத்தோட சூட்டிங் இன்னைக்கு துவங்குது... விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியீடு... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை : தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிவரும் படம் டி43. இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்றைய தினம் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது.

ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவக்கம்

இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவக்கம்

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் டி43. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் இன்றைய தினம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கவுள்ளது.

தயாரிப்புத் தரப்பு திட்டம்

தயாரிப்புத் தரப்பு திட்டம்

படத்தின் முதல் இரண்டு ஷெட்யூலும் ஐதராபாத்தில்தான் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Recommended Video

வெற்றிமாறன் படத்துல நடிக்குறேன் | Actor Karunas chat Part-02 | Filmibeat Tamil
ஐதராபாத் சென்ற தனுஷ்

ஐதராபாத் சென்ற தனுஷ்

படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக அனைத்து நடிகர்களும் இன்றைய தினம் ஐதராபாத்தில் உள்ளனர். இரு தினங்களுக்கு முன்பே நடிகர் தனுஷ் ஐதராபாத் சென்ற புகைப்படங்கள் வெளியானது. இதேபோல படத்தின் நாயகி மாளவிகா மோகனனும் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

வொன்டர்பார் பிலிம்ஸ் அறிவிப்பு

வொன்டர்பார் பிலிம்ஸ் அறிவிப்பு

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்றைய தினம் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள தனுஷின் வொன்டர்பார் பிலிம்ஸ், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. தனுஷின் ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் வெளியான நிலையில், அடுத்ததாக இந்த படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X