#D43 படப்பிடிப்பு தொடங்கியாச்சு.. விரைவில் தலைப்பு அறிவிக்கப்படும்!
சென்னை: தனுஷ், மாளவிகா, ஸ்ம்ருதி நடிப்பில் வெளிவரவுள்ள பெயரிடப்படாத திரைப்படம் #D43.
இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பிஸியாக உள்ள தனுஷ்
சமீபத்தில் தனுஷ், அக்ஷய் குமார் & சாரா அலி கான் உடன் இணைந்து நடிக்கும் "அட்ராங்கி ரே" என்னும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அதை தொடர்ந்து சற்றும் ஓய்வில்லாமல் #D43 படக்குழுவில் இணைந்துள்ளார் தனுஷ்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
#D43 படத்தின் திரைக்கதை, நடிகர்கள் தேர்வு குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வர அதை தொடர்ந்து இப்போது பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ.வி. ட்வீட்
அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து 5வது முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். அது குறித்தும் இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக அமையும் எனவும் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

விரைவில் தலைப்பு
நேற்று படக்குழு படத்தின் முதல் பாடலை படம்பிடிக்க தொடங்கியுள்ளது. படத்தின் தலைப்பை முடிவு செய்துவிட்டதாகவும், விரைவில் அதனை அறிவிக்க இருப்பதாகவும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











