டி 43 அதிரடி அப்டேட்... தனுஷின் கேரக்டரை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய படக்குழு

சென்னை : தனுஷ் அடுத்தபடியாக நடிக்கும் படம் டி 43. இதனை கார்த்திக் நரேன் இயக்குகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் மாளவிகா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் பல படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் ஜி.வி.பிரகாஷின் இசையில் பல பாடல்கள் ஹிட் ஆகி உள்ளன.

டி 43 ல் அருண் விஜய்

டி 43 ல் அருண் விஜய்

மலையாள திரைக்கதை எழுத்தாளர்களான இரட்டையர்கள் ஷரஃபு மற்றும் சுகாஸ் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளனர். கார்த்திக் இயக்கிய மாஃபியா படத்தில் நடித்த பிரசன்னா, அருண் விஜய் போன்றோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தனுஷ் கேரக்டர் இதுதான்

தனுஷ் கேரக்டர் இதுதான்

லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் தனுஷ் நடிக்கும் கேரக்டர் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. டி 43 படத்தில் துப்பறியும் பத்திரிக்கையாளர் (investigative journalist) ரோலில் நடிக்க உள்ளாராம். கார்த்திக்கின் முதல் படமான டி 16 படமும் இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் படம் தான்.

கிரேமேனை முடித்த தனுஷ்

கிரேமேனை முடித்த தனுஷ்

அதனால் இந்த படத்தில் தனுஷின் திறமையை கார்த்திக் எவ்வாறு பயன்படுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தனுஷ் சமீபத்தில் தான் தனது ஹாலிவுட் படமான கிரேமேன் படத்தில் நடித்து முடித்தார்.

காஸ்ட்லி ஓடிடி படம்

காஸ்ட்லி ஓடிடி படம்

கிரேமேன் படம் நெட்பிளிக்சில் வெளியிடப்பட உள்ளது. இன்றைய தேதியில் ஓடிடி.,யில் ரிலீசாகும் காஸ்ட்லி படம் இது தானாம். 2009 ல் மார்க் கிரேனி எழுதிய கிரேமேன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X