D51 : தனுஷுக்கு வில்லனாக இறங்கும் நாகர்ஜுனா.. குபேரா படத்தில் நடந்த ட்விஸ்ட்.. இதுதான் கதையா?

By Yogeshwaran Moorthi

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் குபேரா திரைப்படத்தின் வில்லனாக நாகர்ஜுனா நடிப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.

தெலுங்கு சினிமா நடிகர்களை போல் போல் தமிழ் சினிமா நடிகர்களுக்கும் பான் இந்தியா படங்களில் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருடன் இணைந்து பணியாற்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தயாராக உள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு, சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின.

D51 Nagarjuna is the villain for Dhanush in Kubera film directed by Sekar Kammula

அதன் வரிசையில் நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலை எட்டியது. ரூ.118 கோடி வசூல் ஈட்டியதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதன் மூலமாக தெலுங்கிலும் தனுஷின் மார்க்கெட் அதிகரித்தது.

தற்போது 50வது படமான "ராயன்" படத்தை இயக்கி நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷ் மட்டுமல்லாமல் நாயகியாக ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகர்ஜுனா உள்ளிட்டோரும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகிய லவ் பேர்ட்ஸ், ஃபிடா, ஆனந்த், கோதாவரி, லீடர் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. இதனால் இந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

பிச்சைக்காரர் லுக்கில் இருந்த தனுஷின் கெட்டப் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதேபோல் குபேரா என்ற தலைப்பும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குபேரா படத்தின் சில தகவல்கள் வெளி வந்துள்ளன. அதில் தனுஷ் பிச்சைக்காரராக இருந்து பெரிய அரசியல்வாதியாக மாறுவதே கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்த படத்தில் நடிகர் நாகர்ஜுனா இன்விஸ்ட்டிகேடிவ் அதிகாரியாக நடிப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த கதாபாத்திரம் கூடுதல் வில்லத்தனத்துடன் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் குபேரா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை நாகர்ஜுனா ஏற்றுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X