#D55.. தனுஷ் முதல் சாய் பல்லவி வரை.. எகிறிய சம்பளம்.. இந்த விஷயத்தில் மம்முட்டி கிரேட் போலயே
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தை அவரே தயாரிக்கிறார். படத்தை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறார் என்றும் ஒரு பேச்சு உள்ளது. படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். படத்தின் பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில் இந்த படத்தில் அதிகப்படியான நட்சத்திரப் பட்டாளங்கள் இருப்பதால் அவர்களின் சம்பளம் குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக இந்த படத்தை தனுஷே தயாரிப்பதால், இதில் அவருக்கான சம்பளம் தொடங்கி மற்ற பெரிய ஸ்டார்களான மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா உள்ளிட்டோருக்கு எந்த அளவுக்கு சம்பளம் கொடுத்து கமிட் செய்துள்ளார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
இது தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் பலமாக அடிபட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ், இந்த படத்தில் தனக்கான சம்பளமாக ரூபாய் 45 கோடிகள் சம்பளமாக நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சாய் பல்லவிக்கு இந்த படத்திற்காக ரூபாய் 12 கோடிகள் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகை ஸ்ரீ லீலாவுக்கு ரூபாய் 3 கோடிகள் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஸ்ரீ லீலாவுக்கான போர்ஷன் குறைவு என்றும் கூறப்படுகிறது.

அமரன் வெற்றி: அதேபோல் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு ரூபாய் 15 கோடிகள் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் ஓடிக் கொண்டு உள்ளது. இவருக்கு அமரன் படத்தில் முதலில் ரூபாய் 6 கோடிகளும், படத்தின் வெற்றிக்குப் பின்னர் மேலும் நான்கு கோடிகளும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு ரூபாய் மூன்று கோடிகள் சம்பளம் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மம்முட்டி: சம்பள விஷயத்தில் நடிகர் மம்முட்டி மட்டும் மிகவும் கறாரான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவருக்கு ரூபாய் 35 கோடிகள் வரை சம்பளம் கொடுக்க தனுஷ் தயாராக இருந்துள்ளார். ஆனால் மம்முட்டியோ அவ்வளவு சம்பளம் எல்லாம் வேண்டாம் என்று கறாராக தெரிவித்துள்ளார். ஆனாலும் தனுஷ் தரப்பில், மம்முட்டிக்கு குறைந்த சம்பளம் கொடுக்க விருப்பமே இல்லை என்பதால் அவரிடம் போராடி பேசி, இறுதியாக ரூபாய் 24 கோடிகள் சம்பளமாக கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். D55 படத்திற்கான சம்பளக் கணக்கு குறித்த பேச்சுக்கள் தமிழ் திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.



Click it and Unblock the Notifications











