என் சக்திக்கு அவ்வளவுதான் முடியும்.. தனுஷ் படம் பற்றி இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓபன்
சென்னை: தனுஷ் தனது 56வது படத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் இணைந்திருக்கிறார். தமிழரசன் இயக்கிய முதல் படமான லப்பர் பந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் அப்படம் குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில் ரசிகருக்கு அளித்திருக்கும் பதில் வைரல் ஆகியிருக்கிறது.
தனுஷின் நடிப்பில் கடைசியாக கர, தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா ஆகிய படங்கள் வந்தன. இவற்றில் கர இந்த வருடத்திலும், மற்ற படங்கள் கடந்த வருடத்திலும் வந்தன. இட்லி கடை தவிர்த்து மற்ற படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தன. இட்லி கடை படத்தை தனுஷே இயக்கியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார்.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். மேலும் மம்மூட்டி முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தில் பணியாற்றுவதில் பெரும்பாலானோர் முக்கியமான பிரபலங்கள் ஆவார்கள். அதுவும் இசையமைப்பில் சாய்தான் இப்போது சென்சேஷனலாக கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் களமிறங்கியிருப்பது கண்டிப்பாக பெரிய பலமாகவே கருதப்படுகிறது.
எப்படி இருக்கும் படம்?: படமானது அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இதற்கு முன்னர் இயக்கிய அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது. உலகம் முழுவதும் மொத்தம் அப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது கவனிக்கத்தக்கது. எனவே எஸ்கேவுக்கு கொடுத்த மாதிரியான ஒரு வெற்றியை கண்டிப்பாக இப்படத்திலும் ராஜ்குமார் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
தமிழரசன் பச்சமுத்து: ஓம் படத்தை முடித்துவிட்டு லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தன்னுடைய 56வது படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழரசனும் இளம் இயக்குநர்களில் பெரிய வெற்றியை பெற்றவர் ஆவார். எனவே இவரும் தனுஷை வைத்து தரமான சம்பவம் செய்துவிடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் தமிழரசன்.
என்ன பதில்?: அதாவது தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. எனவே அன்றைய தினம் D56 குறித்து அப்டேட் வருமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தமிழரசன், "வராது தம்பி. D55 ரிலீஸுக்கு பிறகுதான் எதுவாக இருந்தாலும். வேண்டுமென்றால் அன்றைக்கு காஸ்ட்யூம் டிசைனர் யார் என அப்டேட் சொல்கிறேன். என் சக்திக்கு அவ்வளவுதான் முடியும்" என தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
தமிழ் முருகன்: அதுமட்டுமின்றி கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் புத்தகத்தை தழுவி வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் முருகன் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பு நேற்றுதான் வந்தது. ஏற்கனவே தனுஷும், வெற்றிமாறனும் சேர்ந்த படங்கள் அனைத்துமே மெகா ப்ளாக் பஸ்டர்தான். எனவே இதுவும் அதே மாதிரியான ஒரு ரிசல்ட்டை பெறும் என நம்பிக்கை எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
