தபாங் படத்தை தயாரித்த சல்மான் தம்பிக்கு 'ஜன்டு பாம்' நோட்டீஸ்

அப்படத்தில் இடம் பெற்றுள்ள முன்னி பத்நாம் என்று தொடங்கும் பாடலில் ஜன்டு பாம் என்ற வார்த்தை வருவதையடுத்து இந்த வக்கீல் நோட்டீஸ்.
இதுதொடர்பாக அர்பாஸ் கான் புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஜன்டு பாம் தயாரிப்பு நிறுவனமான இமாமி நிறுவனம் அனுப்பியுள்ள நோட்டீஸில், ஜன்டு பாம் என்ற எங்களது பிராண்ட் பெயரை பாடலில் பயன்படுத்தியிருப்பதன் மூலம் எங்களது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஜன்டு பாம் என்ற பெயரை நாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் எங்களது ஒப்புதல் இல்லாமல் ஜன்டு பாம் என்ற பெயரை உங்களது படத்தில் பயன்படுத்தியுள்ளீர்கள். உடனடியாக அந்தப் பாடலை நீக்க வேண்டும் அல்லது ஜன்டு பாம் என்றுவரும் வரியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Comments
அர்பாஸ் கான் சல்மான் கான் ஜன்டு பாம் நோட்டீஸ் தபாங் திரைப்படம் dabaang movie salman khan zandu balm issues notice to arbaaz khan


Click it and Unblock the Notifications