twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபுதேவா எங்கள் சொத்து-தபாங் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சல்மான் கான் பேச்சு

    |

    மும்பை: இயக்குநர் பிரபுதேவா எங்கள் சொத்து என்று நடிகர் சல்மான் கான், தபாங் 3 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார். மேலும், அவர் இந்த படத்தை இயக்கியிருப்பதே வெற்றிக்கு உத்தரவாதம் தான். எனது அடுத்த படத்தையும் பிரபுதேவா தான் இயக்குகிறார் என்றும் நடிகர் சல்மான் கான் பேசினார்.

    பாலிவுட்டின் முன்னணி நாயகன் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து 3ஆவது பாகமான தபாங் 3 பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

    Dabang 3 Trailer Release-Salman Khan Speech

    தபாங் படத்தின் முந்தைய பாகங்களில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்ஃபாஸ்கான், மாஹி கில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

    தீபாவளிக்கு புது ட்ரெஸ்ஸோட பிகில் ஊதிகிட்டு கைதிய போய் பாருங்கதீபாவளிக்கு புது ட்ரெஸ்ஸோட பிகில் ஊதிகிட்டு கைதிய போய் பாருங்க

    இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் ட்ரெயலர் நேற்று புதுமையான முறையில் வெளியிடப்பட்டது. தபாங் 3 படக்குழு வீடியோ கான்ஃபரஸிங் மூலம் மும்பையில் இருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்களை சந்தித்து, ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் உரையாடி பின்பு, படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டது. புதுமையான முறையில் அரங்கேறிய ட்ரெய்லர் வெளியீடு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தபாங் 3 டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Dabang 3 Trailer Release-Salman Khan Speech

    இவ்விழாவில் பேசிய இயக்குநர் பிரபுதேவா, இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். தபாங் வெற்றியை தொடர்ந்து தபாங் 3 எடுக்கிறோம் எனும்போதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. மொத்த படக்குழுவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறோம்.

    இந்தியா முழுதும் இப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக சந்திக்க உள்ளோம். படத்தின் டிரெய்லர் உங்களை கவர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படமும் உங்களை கவரும் என்றார்.

    Dabang 3 Trailer Release-Salman Khan Speech

    சல்மான் கான் பேசும்போது, தென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் படங்களை விரும்பி பார்ப்பேன். இங்கே இப்போது இந்தி சினிமாவை விடவும் பாகுபலி, கே.ஜி.எஃப் என தென்னிந்திய சினிமாக்கள் தான் வசூல் குவிக்கின்றன. தமிழில் குறிப்பாக விஜய்யின் போக்கிரி படத்தை நான் ரீமேக் செய்து நடித்தேன்.

    அவரது தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தபாங் 3 படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படம் தென்னிந்திய படம் போல் தான். இதில் அதிகமாக தென்னிந்திய கலைஞர்கள் தான் வேலை பார்த்துள்ளனர். பிரபுதேவா எங்களுடைய சொத்து. அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பது போன்றது.

    எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார். தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன். படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றார்.

    English summary
    Actor Salman Khan spoke at the trailer launch of Dabang 3 that director Prabhu Deva is our asset. And the fact that he directed this film is a guarantee of success. Actor Salman Khan also said that Prabhu Deva is directing my next film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X