இப்படியே போயிட்டிருந்தா எப்படி? 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...
சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து இந்தியில் ஹிட்டான படம், தபாங். இதையடுத்து இதன் அடுத்த பாகம் உருவானது. 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் ஹிட். இப்போது 3 வது பாகம் உருவாகியுள்ளது.
இதில், சல்மான் கான், சல்புல் பாண்டே கேரக்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா மீண்டும் ஹீரோயின். கன்னட ஹீரோ சுதீப் வில்லனாக நடித்திருக்கிறார்.

பிரபுதேவா இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில், இதன் 4 ஆம் பாகமும் உருவாக இருப்பதாக, நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
அதற்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்குவது கடினம்தான். இருந்தாலும் இந்தப் படத்தின் நான்காம் பாகம் உருவாகிறது. ஹாலிவுட்டில் வந்த ராக்கி, ராம்போ படங்களின் தொடர் போல இது உருவாகிறது என்றார்.

ஆனால், படத்தில் எமோஷனுக்கு இடம் வேண்டும். அது இருந்தால் மற்றக் கேள்விகளுக்கே இடமிருக்காது என்றார்.


Click it and Unblock the Notifications