என்னா ஒரு ‘டகால்டி’.. போஸ்டர் விவகாரத்தில் சடாரென அந்தர்பல்டி அடித்த சந்தானம்!

டகால்டி போஸ்டர் சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ளார் சந்தானம்.

சென்னை: டகால்டி பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகை பிடித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது தொடர்பாக நடிகர் சந்தானம் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள படம் டகால்டி. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரித்திகா சென் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று முன்தினம் வெளியாகி தேசிய அளவில் டிரெண்டிங்கானது. விஜய்யின் சர்கார் பட போஸ்டர் மாதிரியே, டகால்டி போஸ்டர் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

எதிர்ப்பு:

எதிர்ப்பு:

அதேபோல், சர்கார் பட போஸ்டர் சந்தித்த அதே பிரச்சினையை டகால்டி போஸ்டரும் சந்தித்தது. அதாவது, போஸ்டரில் சந்தானம் சிகரெட் பிடிப்பது போல் இருந்ததால், அது சர்ச்சையானது. டகால்டி போஸ்டருக்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கவனக்குறைவு:

இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சந்தானம், ‘டகால்டி போஸ்டர் கவனக்குறைவாக பதிவேற்றப்பட்டுவிட்டது' என தெரிவித்துள்ளார். மேலும், ‘உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை விளம்பரப்படுத்தும் வகையில் போஸ்டர் இருக்கிறது என்பதை தான் உணர்ந்துவிட்டதாகவும், இனி வரும் காலங்களில் தனது படங்களில் இது போன்ற போஸ்டர்கள் வெளியிடப்படாது' எனவும் அவர் கூறியுள்ளார்.

மாம்பழம் சாப்பிடுங்கள்:

சந்தானத்தின் இந்த விளக்கத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுள்ளனர். "புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள், மாம்பழம் சாப்பிடுங்கள்" என டகால்டி போஸ்டரில் டகால்டி செய்து ரசிகர் ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழ்ப் பையன்:

தமிழ்ப் பையன்:

டகால்டி முழுக்க முழுக்க காமெடி படமாக இல்லாமல், சந்தானத்தின் பிற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் செட்டில் ஆன தமிழ் பையனாக சந்தானம் நடித்துள்ளார் என்று இயக்குனர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். இந்த படத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் விரைவில் ரிலீஸ் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இது தான் டகால்டி:

இது தான் டகால்டி:

ஆனால், ஏற்கனவே சர்கார் மற்றும் அயோக்யா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சந்தித்த எதிர்ப்புகள் சந்தானத்திற்கு தெரியாதா என்ன? அதோடு டகால்டி படத்தை அவரும் இணைந்து தான் தயாரிக்கிறார். அப்படி இருக்கையில் அவருக்குத் தெரியாமல் எப்படி அப்படி ஒரு போஸ்டர் வெளியாகும். இலவச புரோமோசனுக்க்காகத் தான் சந்தானம் அப்படி ஒரு போஸ்டர் வெளியிட்டு விட்டு, தற்போது அந்தர்பல்டி அடித்து விட்டார் என்கிறார்கள். என்னா ஒரு டகால்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X