டகால்டி படத்தின் ஆலியா ஆலியா பாடலின் புரொமோ
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதும் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது .அது என்னவென்றால் விறுவிறுப்பான ஆக்ஷ்ன் படங்களில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் ஒரு ஐடம் சாங் வரும் .சில நேரங்களில் அந்த வகையான பாடல் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகபடுத்த உதவியிருக்கும் .அப்படியொரு பாடல் தான் டகால்டி படத்தின் ஆலியா ஆலியா பாடல் .
டகால்டி படம் முழுக்க ஆக்ஷ்ன் காட்சிகள் தான் நிரம்பி இருக்கிறது .சம்மந்தம் இல்லாத பிரச்சனையில் தலையிடும் சந்தானம் நாயகியை ஒரு வில்லனிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .அங்கிருந்து அவர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களே டகால்டி படம் .



Comments


Click it and Unblock the Notifications