Nila serial: நிலாவோட அப்பாவும் அம்மாவும் சந்திக்க முடியாமலே போகுதே!

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவின் அம்மாவும், அப்பாவும் ஒரே இடத்தில் இருந்தும் இன்னும் சந்திக்க முடியாமலே போகுது. அதே போல நீலாம்பரியையும் அன்வராக இருக்கும் ஸ்ரீதர் இப்போது சந்திக்க முடியாமலே போகுது.

நிலாவின் வளர்த்த அப்பா அம்மாதான்,நிலாவுக்கு தாய் மாமா மாமி.நிலாவின் அம்மா ரேவதின்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டு, நீலாம்பரி வீட்டுல வேலை செய்யறாங்க. காரணம் நீலாம்பரிதான் நிலாவின் அப்பா சொத்துக்கு ஆசைப்பட்டு, அவரை கொன்னுட்டதா நினைச்சுகிட்டு இருக்காங்க.

ஆனால், ஸ்ரீதர் அன்வர் என்கிற பெயரில் முதலில் ஹைதரா பாத்தில் வாழ்ந்து வந்தவர், இப்போது, சென்னைக்கே வந்து வைத்தியம் பார்க்க ஒரு ஆஸ்ரமத்துக்கு வந்துடறார். அதே ஆஸ்ரமத்தில்தான் அவரின் மனைவியும் இருக்காங்க

அசோக்கின் மனைவியுடன்

அசோக்கின் மனைவியுடன்

ஆஸ்ரமத்தில் ரேவதி, நீலாம்பரியின் தம்பி பொண்டாட்டி அஞ்சலியின் வைத்தியத்துக்காக அதே ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கி இருக்கா. ஆனால், இன்னமும் அஞ்சலிக்கு வைத்தியம் பார்க்கும் அந்த டாக்டரை அதாவது தனது புருஷன், அதுவும் நிலாவின் அப்பாவை ரேவதிக்கு சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.; ரேவதியும் பேரை நீலாம்பரிக்கு பயந்து மாத்தி வச்சுக்கறாங்க. ஸ்ரீதரும் அன்வர் என்று பேரையும் மாத்தி வச்சுக்கறார். மதமும் மாறிவிடுகிறார். நீலாம்பரியும் பேரை மாத்திதான் வச்சுக்கிட்டு இருக்காங்க.

நிலா அசோக்

நிலா அசோக்

அம்மா, அப்பாவை கண்டு பிடிக்க வேண்டும், தனது சொத்துக்களை நீலாம்பரியிடம் இருந்து திரும்ப பெற்று காக்க வேண்டும் என்று, சும்மா தனக்குத் தானே தாலி கட்டிக்கிட்டு, நீலாம்பரி ஆசைப்பட்ட படி அசோக்கை கல்யாணம் செய்துக்கிட்டதா வந்து ரெண்டு பேரும் பொய் சொல்றாங்க. ஆனாலும் நீலாம்பரி நம்பாமல் அசோக்கும், நிலாவும் தன் கண் முன்னால் தாலி கட்டிக்கணும்னு விழா ஏற்பாடு செய்யறாங்க.

இருவரும் தரமசங்கடத்தில்

இருவரும் தரமசங்கடத்தில்

மறு தாலி கட்டிக்கும் சடங்கு வேண்டாம் என்று சொல்லியும் நீலாமபரி கேட்கவில்லை. அசோக் கட்டின தாலி என்று கோயிலில் தனக்குத் தானே தாலி கட்டிக்கொண்டாள் நிலா.இப்போது உண்மையாகவே நிலா கழுத்தில் அசோக் தாலி கட்டணும்னு நீலாம்பரி ஏற்பாடுகள் செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் தர்மச ங்கடத்தில் ரெண்டு பேரும் முழிக்கறாங்க.

ஸ்வேதா சஞ்சய்

ஸ்வேதா சஞ்சய்

நீலாம்பரியின் மகன் சஞ்சய் நிலாவின் தங்கச்சி ஸ்வேதாவை கெடுத்துட்டு, கல்யாணம் செய்துக்க மறுக்கறான்.இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் பொறுப்பு வேறு நிலாவின் த லையில் விழுகிறது. நடுவில் காதலான் கார்த்திக் வேற எல்லாத்துக்கும் விட்டுக் கொடுத்து போறான். ஆனால், இந்த மறு தாலி கட்டும் சடங்குக்கு அவன் என்ன சொல்வான் என்றும் தெரியவில்லை. இப்படி ஏகப்பட்ட டென்ஷனில் நிலா இருக்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X