ரஜினி, அஜித்தை விடுங்க: பாக்ஸ் ஆபீஸில் யார் மோதுகிறாங்கன்னு பாருங்க
சென்னை: பாக்ஸ் ஆபீஸில் அப்பாவும், மகனும் மோதுகிறார்கள்.
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்சிகா நடித்துள்ள துப்பாக்கி முனை படம் வரும் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.
துப்பாக்கி முனை விக்ரம் பிரபுவுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் பிரபு
துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபு பிர்லா போஸ் என்கிற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார். ஒரு வழக்கு விசாரணையில் ஈடுபடும்போது பிர்லா போஸின் வாழ்க்கையே எப்படி பிரச்சனையாகிறது என்பது தான் கதை என்கிறார் இயக்குனர்.

தோற்றம்
சமூக பிரச்சனை பற்றி பேசும் படம் துப்பாக்கி முனை. இந்த படத்தின் சில காட்சிகளில் விக்ரம் பிரபு 45 வயது மதிக்கத்தக்கவர் போன்று வருகிறார். படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது என்று இயக்குனர் தினேஷ் தெரிவித்துள்ளார். ஹன்சிகா, விக்ரம் பிரபு இந்த படம் மூலம் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

பிரசாந்த்
வெற்றிசெல்வன் இயக்கத்தில் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள ஜானி படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜானி படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார். ஆக 14ம் தேதி பிரபு தனது மகனுடன் பாக்ஸ் ஆபீஸில் மோத உள்ளார்.

பிரபு
பிரபு இதுவைர நடத்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் பிரபுவை தவிர வேறு யாரையும் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்பா சிவாஜி கணேசன் போன்றே அவரும் நேரம் தவறாதவர். காலை 6 மணிக்கு கால்ஷீட் என்றால் 5.45 மணிக்கு எல்லாம் மேக்கப்புடன் ரெடியாக இருப்பார். படத்தின் பெரிய பலமே அவர் தான் என்கிறார் தியாகராஜன்.


Click it and Unblock the Notifications











