வாரிச் செல்லும் கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் தயாரிப்பாளர் மரணம்!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இளம் தாயரிப்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு பலி

கொரோனாவால் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

பிரபலங்கள் பலி

பிரபலங்கள் பலி

தமிழ் சினிமாவில் கடந்த 2 மாதங்களில் ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பலரும் உயிரை விட்டுள்ளனர். தயாரிப்பாளர்கள் பாபு ராஜா, முத்துக்குமரன், இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாளன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

இளம் தயாரிப்பாளர்

இளம் தயாரிப்பாளர்

மேலும் நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, மாறன், பாடகர் கோமகன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரபல இளம் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

தயாரப்பாளர் கலைசெல்வன்

தயாரப்பாளர் கலைசெல்வன்

2019ஆம் ஆண்டு விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாதா87. இந்தப் படத்தை இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் தயாரித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடரும் மரணங்கள்

தொடரும் மரணங்கள்

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X