கவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

சென்னை: கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் ஒட்டு மொத்த நடிகர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்தார்.

Dada hero kavin and monica wedding reception photos trending on internet

இதையடுத்து சத்ரியன் என்ற படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் தனது தடத்தை பதித்த கவின், நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் ஹீரோவாக மாறினார்.

நடிகர் கவின்: அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்த கவின்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடனான காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக் பாஸ் வீட்டிலருந்து 5லட்சம் பணப் பெட்டியுடன் வெளியேறிய கவின், இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படத்தில் ஐடி ஊழியராக நடித்திருந்தார்.

டாடா படத்தில்: இதையடுத்து, அண்மையில் கவின் நடித்த டாடா திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. கல்லூரி மாணவனாக, காதலனாக, அப்பா கவின் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ரொமான்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

கவின் மோனிகா திருமணம்: இந்நிலையில், இளம் பெண்களின் மனதை கவர்ந்த கவின், தனது நீண்ட நாள் பள்ளித் தோழியான மோனிகா என்பவர் கடந்த 20ந் தேதி திருமணம் செய்து கொண்டார். கவின் மோனிகாவின் திருமணம் ஆடம்பரமே இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

திருமண வரவேற்பு: இதையடுத்து, கவின் மோனிகா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று தடபுடலாக நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் சதீஷ், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, யூடியூபர் இர்பான் கவினின் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X