டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!

சென்னை: நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு சவாலான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் ஹீரோயினாக ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். நடிகை அபர்ணா தாஸுக்கும் மலையாள நடிகர் ஒருவருடன் இன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், இவர்களின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அபர்ணா தாஸ்: கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நியான் பிரகாஷன் படத்தில் ஹீரோயினாக நடித்த அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அந்த படத்தை தொடர்ந்து, மனோகரம் படத்தில் நடித்த, இவர், பிரியன் ஒட்டத்திலானு, சீக்ரெட் ஹோம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்ததை தொடர்ந்து தெலுங்கில் ஆதிகேஷவா படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

Dada movie actress aparna das marriage haldi celebration photos trending on social media

ஹிட் திரைப்படம்: இதையடுத்து, கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற டாடா படத்தில் ஹீரொயினாக நடித்திருந்தார். காதலி, மனைவி, அம்மா என ஒரே படத்தில் கன கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், படத்தில் நடித்த கவின், அபர்ணா தாஸ் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Dada movie actress aparna das marriage haldi celebration photos trending on social media

காதல் திருமணம்: இந்த படத்தை தொடர்ந்து, பல தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திடீரென திருமணம் குறித்த அறிவிப்பு இணையத்தில் வெளியானது. நடிகை அபர்ணா மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அபர்ணா தாஸ் நடித்த 2வது படமான மனோகரம் படத்தில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த தீபக் பரம்பொல்லை காதலித்த நிலையில், பெற்றோரிடம் காதலை சொல்லி இருவரும் திருமணத்திற்கு சம்மதம் வாங்கிய நிலையில், தற்போது அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

Dada movie actress aparna das marriage haldi celebration photos trending on social media

கொண்டாட்ட புகைப்படம்: அபர்ணா தாஸ் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால், திருமண புகைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X