அடுத்தப் படத்தில் லைகாவுடன் இணைந்த டாடா பட இயக்குநர்.. மகிழ்ச்சிப்பதிவு!
சென்னை : பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் நேற்றைய தினம் ரிலீசாகியுள்ள படம் டாடா.
டாடா படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
படம் 400 திரையரங்குகளில் ரிலீசான நிலையில், சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

நடிகர் கவின்
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் கவின். முன்னதாக சரவணன் மீனாட்சி தொடர் மூலமும் கவனத்தை பெற்றார். அவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது டாடா படம். படத்தில் கவினுக்கு ஜோடியாகியுள்ளார் அபர்ணா தாஸ். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து கவனத்தை ஈர்த்தவர் இவர்.

அடுத்தடுத்த படங்களில் கவின்
கவின் நடிப்பில் முன்னதாக சத்ரியன், நட்புன்னா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்கள் ரிலீசாகியுள்ள நிலையில், தற்போது டாடா படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படமும் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

டாடா படம்
இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள டாடா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், 400 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டது. இதனிடையே இந்தப் படத்திற்கான ட்விட்டர் விமர்சனம் மிகவும் பாசிட்டிவ்வாக வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தளங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டாடா படம் ரிலீசின் போதே அவர், தனது அடுத்தப் படத்தில் லைகா நிறுவனத்துடன் கமிட்டாகியுள்ளார். தனது முதல் படத்தின் ரிலீசின்போதே அவர் பிரபல நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளார்.

லைகா அறிவிப்பு
இதுகுறித்து லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. கணேஷ் கே பாபுவிற்கு ஒப்பந்தத்தை கொடுக்கும்படியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள கணேஷ் கே பாபு, ரெட் ஜெயண்ட மூவிஸ், தமிழ்குமரன் உள்ளிட்டவர்களுக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











