கமலை நேரில் சந்தித்து ஆசி பெற்ற டாடா பட நாயகன் கவின்.. கோயிலுக்கு சென்றதாக சிலிர்ப்பு!
சென்னை : நடிகர் கவின் சீரியல்கள், திரைப்படங்கள் என்று நடித்திருந்தாலும் அவரை அதிகமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டி தொட்டியெல்லாம் ரசிகர்களை சென்றடைந்தார் கவின்.
கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் நேற்றைய தினம் டாடா படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் கவின்
நடிகர் கவின், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். முன்னதாக இவரது நடிப்பில் சத்ரியன், நட்புன்னா என்னன்னா தெரியுமா உள்ளிட்ட திரைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான லிஃப்ட் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி
தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தார் கவின். இந்த நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியே இவருக்கு பட வாய்ப்புகளையும் அதிகமாக பெற்றுத் தந்தது.

டாடா படம்
இந்நிலையில் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள டாடா படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் கவின். நேற்றைய தினம் இந்தப் படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் கவினுக்கு ஜோடியாகியுள்ளார் அபர்ணா தாஸ். டீன் ஏஜ் காதல் மற்றும் அதுதொடர்பான சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் ரிலீசாகியுள்ளது.

சிறப்பான விமர்சனங்கள்
டாடா படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தொடர்ந்து சிறப்பான விமர்சனங்களை அளித்து வருகின்றனர். படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரின் நடிப்பும் பேசப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுடன் சந்திப்பு
படத்தின் சிறப்பான விமர்சனங்களை தொடர்ந்து, படத்தின் நாயகன் கவின் தற்போது நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். கோயிலுக்கு சென்றதாகவும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். கமலுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவின் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











