Aparna Das : கடின உழைப்பால் புது வீடு கனவை நனவாக்கிய அபர்ணா தாஸ்… குவியும் வாழ்த்து!

சென்னை : நடிகை அபர்ணா தாஸ் சொந்தமாக புதிய வீடு ஒன்றை கட்டி உள்ளார்.

மலையாள நடிகையான அபர்ணா தாஸ் நிஜன் பிரகாஷன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

இப்போது வரை நடிகை அபர்ணா 4 மலையாள படங்களிலும், 2 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

Dada movie heroine aparna das shared new home video

பீஸ்ட் படத்தில் : நடிகை அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பீஸ்ட் படத்தின் போஸ்டர் வெளியான அன்றே யார் இந்த பெண் என ரசிகர்கள் அபர்ணா தாசை வலை வீசி தேடினார்கள். பீஸ்ட் படம் அபர்ணா தாஸிற்கு ஒரு முக்கியமான படமாக அமைந்தது.

டாடா படத்தில் : இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், டாடா என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Dada movie heroine aparna das shared new home video

பாராட்டுக்குரிய நடிப்பு :அந்த படத்தில் அபர்ணா தாஸ், கல்லூரி படிக்கும் பெண்ணாக, கர்ப்பிணியாக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என பல கோணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக டாடா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தாய்மையின் வலியை உணர்ந்து மிகவும் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

எனது சொந்த வீடு : நடிகை அபர்ணா தாஸ் புது வீடு கட்டி குடியேறி இருப்பதை வீடியோவாக அப்லோடு செய்துள்ளார். அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் இது எனது மிகப்பெரிய மைல்கல். எனது சொந்த வீடு என்று பதிவிட்டு #dreamcometrue என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. பலரும் அபர்ணாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X