சக்சஸ் மீட் கொண்டாடிய டாடா பட டீம்.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்!

சென்னை : நடிகர் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த வாரத்தில் வெளியாகியுள்ளது டாடா படம்.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியாகியுள்ள டாடா படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கடந்த 3 நாட்களில் படத்தின் வசூல் சர்வதேச அளவில் 6 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

டாடா படம்

டாடா படம்

நடிகர் கவின் -அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த வாரத்தில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டாடா படம். டீன் ஏஜ் காதலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகி 3 நாட்களிலேயே சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் எட்டியுள்ளது.

தெறிக்கவிடும் வசூல்

தெறிக்கவிடும் வசூல்

கடந்த 3 நாட்களில் டாடா படம் சர்வதேச அளவில் 6 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக 3 படங்களில் கவின் நடித்துள்ள நிலையில், அவரது கேரியரில் டாடா படம் பெஸ்டாக அமைந்துள்ளது. அதேபோல அபர்ணா தாஸிற்கும் இந்தப் படம் கோலிவுட்டில் அதிகமான வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று நம்பலாம்.

கமல்ஹாசன் பாராட்டு

கமல்ஹாசன் பாராட்டு

படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள நிலையில், படத்தின் ரிலீசின்போதே அவருக்கு லைகா நிறுவனத்துடன் அடுத்தப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசனும் கணேஷ் கே பாபு, கவின் மற்றும் படக்குழுவினருக்கு நேரில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

சக்சஸ் கொண்டாட்டம்

சக்சஸ் கொண்டாட்டம்

இதனிடையே படத்தின் சக்சஸை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டியுள்ளார். இதன் வீடியோ தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமூக பொறுப்புடன் படங்கள்

சமூக பொறுப்புடன் படங்கள்

இதனிடையே, சமூக பொறுப்புடன் இனிவரும் தனது படங்கள் இருக்க வேண்டுமென்று தோழர் நல்லகண்ணு அறிவுரையும் டாடா படத்திற்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்ததாக கணேஷ் கே பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தோழர் நல்லகண்ணுவுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

வசூல்மழையில் டாடா படம்

வசூல்மழையில் டாடா படம்

அறிமுக இயக்குநரின் படமாக இருந்தாலும் டாடா படம் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படம் கடந்த 3 நாட்களிலேயே 6 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X