twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல பாலிவுட் நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது..மத்திய அரசு அறிவிப்பு

    |

    டெல்லி: பிரபல இந்தி நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பாலிவுட்டுல் 60 கள் முதல் 80 கள் வரை கதாநாயகியாக நடித்த ஆஷா பரேக் பிரபல நடிகர் பரேக்கின் மகள் ஆவார்.

    இந்திய அரசால் திரையுலக செயல்பாட்டுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

    கடவுளே எல்லாம் நல்லதா நடக்கனும்..நடிகை காஜல் அகர்வால் கணவருடன் சாமி தரிசனம்!கடவுளே எல்லாம் நல்லதா நடக்கனும்..நடிகை காஜல் அகர்வால் கணவருடன் சாமி தரிசனம்!

     கலைத்துறையின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது

    கலைத்துறையின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது

    இந்திய அரசால் திரையுலகில் பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. கலைத்துறையில் சேவையாற்றியவர்களுக்கு மத்திய அரசால் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்படுகிறது. சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் விட உயரிய விருது வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சமமான விருதாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இதை சில நட்சத்திரங்களே இதுவரை பெற்றுள்ளனர்.

     ஆஷாபரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

    ஆஷாபரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

    கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது பிரபல நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஷாபரேக் பிரபல பாலிவுட் நடிகை இவர் இதற்கு முன் 1992 ஆம் ஆண்டு சினிமாவுக்கான சேவைகளுக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

     1960-70 களின் பாலிவுட் முன்னணி கதாநாயகி ஆஷாபரேக்

    1960-70 களின் பாலிவுட் முன்னணி கதாநாயகி ஆஷாபரேக்

    இந்தி திரைப்பட உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவர் ஆஷா பரேக். 1960 கள் மற்றும் 1970 களில் உச்ச நடிகையாக முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஆஷா பரேக் திரை வாழ்க்கை குழந்தை நட்சத்திரமாக 10 வயதாக இருந்தபோது மா (1952) படத்தில் நடித்தார். சில படங்கள் நடித்தப்பின் கல்வி கற்க சென்று விட்டார். 1959 ஆம் ஆண்டு நசீர் ஹுசைனின் தில் தேகே தேகோ (1959), படத்தில் பிரபல நடிகர் ஷம்மி கபூருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் 1960 களில் பிரபல நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்தார். முன்னணி நடிகர்களான ராஜ்கபூர், ஷம்மி கபூர், தேவ் ஆனந்த், தர்மேந்திரா என பலருடன் நடித்தார். ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை (1961), ஃபிர் வோஹி தில் லயா ஹூன் (1963), தீஸ்ரி மன்சில் (1966) , பஹரோன் கே சப்னே (1967), பியார் கா மௌசம் (1969), மற்றும் கேரவன் (1971) ஆகியவை அவரது புகழ்பெற்ற படங்கள் ஆகும்.

     நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் ..பத்மஸ்ரீ விருது பெற்ற ஆஷா பரேக்

    நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் ..பத்மஸ்ரீ விருது பெற்ற ஆஷா பரேக்

    ஆஷா பரேக் குஜராத்தி, பஞ்சாபி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 80 களின் பிற்பகுதியில் கதாநாயகியாக நடிப்பதை விட்டு கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். 1990 களில் தொலைக்காட்சி ஊடகத்தில் கால் பதித்த அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். ஜோதி என்கிற குஜராத்தி சீரியல் தொடரை தயாரித்தார். அந்த சீரியலையும் இயக்கினார். பலாஷ் கே பூல், பாஜே பயல், கோரா ககாஸ் மற்றும் தால் மே காலா போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்தார். இவரது கலைப்பணிக்காக 1992 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

     சிறந்த நடன கலைஞர், சென்சார் போர்டு தலைவர் ஆஷா பரேக்

    சிறந்த நடன கலைஞர், சென்சார் போர்டு தலைவர் ஆஷா பரேக்

    தாதா சாகேப் விருது வழங்கப்பட்டுள்ள ஆஷா பரேக் சென்சார் போர்டின் தலைவராக பதவி வகித்துள்ளார். சென்சார் போர்ட் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான். ஆஷா பரேக் சிறந்த நடனக்கலைஞரும் கூட. பரதம், கதக், குச்சிப்புடி, ஒடிசி கலைகளை கற்றவர். சொந்தமாக நாட்டியப்பள்ளியும், தனது பெயரில் ஒரு மருத்துவமனையையும் மும்பையில் நடத்தி வருகிறார். தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவின் உயரிய விருதாகும். இதற்கு முன்பு ராஜ் கபூர், யாஷ் சோப்ரா, லதா மங்கேஷ்கர், மிருணாள் சென்,தேவிகா ராணி , அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு மதிப்புமிக்க இவ்விருதை பெற்றார்.

    English summary
    The central government has announced the Dada Saheb Phalke Award to popular Hindi actress, producer and director Asha Parekh. Asha Parekh, who starred in Bollywood from the 60s to the 80s, is the daughter of the famous actor Parekh. Last year, actor Rajinikanth was awarded the Dada Saheb Phalke Award, the highest award given by the Government of India for her work in the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X