டாடி கூல்... ஜெயம் ரவி பத்தி பாராட்டு சான்றிதழ் வாசித்த அவரது மனைவி ஆர்த்தி
சென்னை : நேற்றைய தினம் சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ட்விட்டர் பக்கத்தில் ஏராளமானோர் தங்களது தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜெயம் ரவி தன்னுடைய குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட தந்தை என்று அவரது மனைவி ஆர்த்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அளவிட முடியாதது
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தந்தையின் பங்கு அளவிட முடியாதது. ஒரு மனிதனின் வாழ்க்கையை அவரது தந்தையின் தியாகமே வடிவமைக்கும். மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் ஹீரோவாக அவரது தந்தையே இருப்பார். அவரது பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியவில்லை என்றாலும் மறுப்பதற்கில்லாத ஒன்றாக காணப்படுகிறது.

தந்தைகளுக்கு குவிந்த வாழ்த்துக்கள்
இந்நிலையில், நேற்றைய தினம் சர்வதேச தந்தையர் தினம் உலக அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டர் பக்கத்தில் தங்களது தந்தைக்கு நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்களது சிறப்பான செயல்பாடுகளையும் நினைவு கூர்ந்தனர்.

அற்புதமான தந்தை
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி எப்படிப்பட்ட தந்தை என்பது குறித்து அவரது மனைவி ஆர்த்தி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் அற்புதமான தந்தையாக விளங்குவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி தன்னுடைய குழந்தைகளும் இருக்கும் பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

யெஸ் என்ற வார்த்தை
ஜெயம் ரவி டாடி கூல் என்று பாராட்டியுள்ள ஆர்த்தி, குழந்தைகளின் அம்மா நோ சொல்லும் தருணங்களில் எல்லாம் தந்தையாக ஜெயம் ரவி யெஸ் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவதாகவும் சிறப்பான ஆலோசனைகள் குறிப்பாக கரப்பான்களை விட்டுவிட்டு சிலந்திகளை கொல்வதற்கு வழங்கும் ஐடியாக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையர் தின வாழ்த்து
மேலும் மோசமான கடி ஜோக்குகள் ஆகியவற்றிற்காகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தந்தையர் தின வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ள ஆர்த்தி, அவரது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் இருவரும் ஜெயம் ரவிக்கு லவ் யூ சொல்வதாகவும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











