Dagaalty விஜய்யை நினைவூட்டும் 'டகால்டி' சந்தானம்: தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக்
சென்னை: விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் தயாரித்து நடித்துள்ள படத்திற்கு டகால்டி என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஹீரோக்களே பொறாமைப்படும் அளவுக்கு சம்பளம் வாங்கியவர் சந்தானம். எத்தனை நாள் தான் நானும் ஹீரோவுக்கு நண்பனாகவே நடிப்பது என்று ஒரு நல்ல நாளில் அவரும் ஹீரோவானார்.

ஹீரோவானது மட்டும் அல்லாமல் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த விஜய் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு டகால்டி என்று பெயர் வைத்துள்ளனர். 18 ரீல்ஸ் சவுத்ரியுடன் சேர்ந்து சந்தானம் தயாரித்துள்ள டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் #Dagaalty என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை மற்றும் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. தாடி, மீசையுடன் கூலிங் கிளாஸ் அணிந்து தம்மடிப்பது போன்று சந்தானம் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. போஸ்டரை பார்க்கும் போதே ஒரு ஃபீல் வருகிறது, மாஸ் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டகால்டி போஸ்டரை பார்த்தால் சர்கார் போஸ்டர் நினைவுக்கு வருகிறது. தம் வேறு அடிக்கிறார், கண்டிப்பாக எதிர்ப்பு கிளம்பும் போல.
டகால்டி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டகால்டி படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் சந்தானம் இல்லாதது மிகப் பெரிய மைனஸாக இருந்தது. ராஜேஷ் படம் என்றாலே சந்தானம் காமெடி தான் ஹைலைட். சந்தானத்திற்கு பதில் யோகி பாபு உள்பட நான்கு நகைச்சுவை நடிகர்களை நடிக்க வைத்தார் ராஜேஷ். ஆனால் அந்த நான்கு பேரின் காமெடியும் படத்திற்கு கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டகால்டி படத்தை அடுத்து சந்தானம் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அவர் புதுமுகம் ஜான்சன் இயக்கத்தில் ஏ1 என்கிற படத்தில் நடிக்க உள்ளார். சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தில்லுக்கு துட்டு 2 படம் ரசிகர்களை கவர்ந்தது. டகால்டியும் நிச்சயம் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











