திருட்டுப் பசங்க சார்.. புடிச்சு உள்ளே போடுங்க சார்.. டகால்டியைுயும் விடாத தமிழ் ராக்கர்ஸ்
Recommended Video
சென்னை: ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் எஸ்.பி. செளத்ரியின் 18 ரீல்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சந்தானத்தின் டகால்டி திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்களில் லீக்காகி உள்ளன.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்கள் இயங்கி வருகின்றன.
சந்தானம், ரித்திகா சென் நடிப்பில் நேற்று வெளியான டகால்டி படமும் ஆன்லைனில் திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு தலைவலி
நேற்று வெளியான சந்தானத்தின் டகால்டி படம் திருச்செந்தூரில் ஆரம்பித்து மும்பை வரை பல இடங்களில் பயணிக்கிறது. அதிக பொருட் செலவு செய்து எடுத்துள்ள டகால்டி படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், தயாரிப்பாளர் தரப்புக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாசிட்டிவ் விமர்சனம்
டகால்டி படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு அதிகரித்துள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஒரு ஃபுல் அண்ட் ஃபுல் காமெடி என்டர்டெயினர் படமாக டகால்டி வெளியாகி உள்ளதால், சந்தானம் ரசிகர்களை தாண்டி பொது மக்கள் இடையே டகால்டி படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

எதிர்பார்த்த போட்டி
ஜனவரி 31ம் தேதியான நேற்று வெளியான சந்தானத்தின் டகால்டி திரைப்படத்துக்கு போட்டியாக சசிகுமாரின் நாடோடிகள் 2 ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையால் நேற்று காலை நாடோடிகள் 2 ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், பிரச்சனைகளை சரிசெய்து நேற்று இரவு முதல் டகால்டி படத்துக்கு போட்டியாக ரிலீசாகியுள்ளது.

சேஞ்ச் ஓவர்
காமெடி நாயகனில் இருந்து ஹீரோவாக சேஞ்ச் ஓவர் ஆக நடிகர் சந்தானம் இந்த படத்தில் பல புதிய முயற்சிகளை எடுத்துள்ளார். குரு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானம், வில்லன்களை புரட்டி எடுப்பதிலும், நாயகி ரித்திகா சென்னுடன் ரொமான்ஸ் செய்வதிலும் கலக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











