தியேட்டர்களில் அசத்தும் டகால்டி.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்ளோ தெரியுமா?!
Recommended Video
சென்னை: சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான டகால்டி படத்தில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சந்தானம். சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இனிமே இப்படிதான், சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2. அக்யூஸ்ட் நம்பர் ஒன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார் சந்தானம். ஹீரோவாக அவர் நடித்த படங்கள் ஹிட் கொடுக்கவே, அதே பாணியை தொடர்ந்து வருகிறார்.

கூட்டணி
அந்த வகையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் படம் டகால்டி. இந்த படம் நேற்று உலகம் முழுக்க ரிலீஸானது. இந்தப் படத்தில் நடிகர் சந்தானம், அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரித்திகா சென் நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபுவும் இந்த படத்தில் சந்தானத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

ரூ. 4 கோடி வசூல்
படத்தில் காமெடிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை என பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.இந்நிலையில் டகால்டி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் உலகம் முழுவதும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை டகால்டி படம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புயல் வீசும்
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டகால்டி படம் 600 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இதனால் அவ்ரேஜ் பட்ஜெட் படமான டகால்டி நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு புயலை வீசூம் என்றும் கூறப்படுகிறது. டகால்டி படத்தை இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார்.

பாராட்டு
அதிரடி, காதல் என கலந்த நகைச்சுவை படமான டகால்டி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்தானம் - யோகி பாபு காம்போவில் உருவாகியுள்ள இந்த படத்தில் கடத்தல் உட்பட பல டகால்டி வேலைகளை செய்யும் ஒரு இளைஞனாக நடித்திருக்கிறார் சந்தானம். படத்தில் சந்தானம் பேசும் ஒவ்வொரு ஒற்றை வரி பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











