சென்னை பாக்ஸ் ஆபிஸ்.. டாப்பில் டகால்டி.. சந்தானம்- யோகி பாபு கூட்டணி நல்லா வொர்க்கவுட் ஆகுது போல!
சென்னை: சந்தானம் - யோகி பாபு கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டகால்டி படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் பின்னர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இனிமே இப்படிதான், சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2. அக்யூஸ்ட் நம்பர் ஒன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இந்நிலையில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் டகால்டி. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சந்தானத்துடன் யோகி பாபுவும் கூட்டணி அமைத்துள்ளார். இருவரின் காமெடியும் படத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை அதாவது நேற்று வரை சென்னை பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்த படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, சென்னை பாக்ஸ் ஆபிஸில் டகால்டி படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சைக்கோ படம் இரண்டாம் இடத்தையும், நாடோடிகள் 2 மூன்றாம் இடத்தையும், பேட் பாய் ஃபார் லைஃப் படம் நான்காம் இடத்தையும், தர்பார் படம் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது. டகால்டி படம் சென்னையில் முதல் நாளில் 21 லட்சம் ரூபாய் வசூலை குவித்திருக்கிறது என்றும் உலகம் முழுக்க 4 கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











