உன் அண்டா வாய வச்சி அண்ணாமலை மியூசிக் போட்டதெல்லாம் போதும்.. யோகிபாபுவை சரியாக கலாய்த்த சந்தானம்!

சென்னை: சந்தானம் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள டகால்டி படத்தின் ஸ்நீக் பீக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென், யோகி பாபு, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் டகால்டி.

ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் எஸ்.பி. செளத்ரியின் 18 ரீல்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள டகால்டி நாளை திரைக்கு வருகிறது.

சர்வர் சுந்தரம் பஞ்சாயத்து

சர்வர் சுந்தரம் பஞ்சாயத்து

சந்தானம் நடிப்பில் நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடக்கும் சர்வர் சுந்தரம் படமும் ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் இரண்டு சந்தானம் படங்கள் வெளியானால், இரண்டுமே வசூல் ரீதியாக பாதிக்கப்படும் என நடைபெற்ற பஞ்சாயத்து முடிவில் சர்வர் சுந்தரம் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

கலக்கல் காம்போ

கலக்கல் காம்போ

பல ஹீரோக்களுடன் சந்தானத்தின் காம்பினேஷன் கலக்கல் காமெடி காம்போவாக இருந்த வந்த நிலையில், தற்போது டகால்டி படத்தில் ஹீரோ சந்தானம் மற்றும் யோகி பாபுவின் காம்போ காமெடியில் கலக்குகிறது. ஷங்கர் உதவி இயக்குநரான விஜய் ஆனந்த் டகால்டி படத்தை வித்தியாசமாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்நீக் பீக்

சந்தானத்தின் சரவெடி காமெடியில் நாளை வெளியாகவுள்ள டகால்டி படத்தை புரமோட் செய்யும் விதமாக தற்போது வெளியாகியுள்ள ஸ்நீக் பீக் காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது. பெரிய அரண்மனைக்குள் நுழைய சந்தானம் மற்றும் யோகி பாபு போடும் திட்டமாக இந்த காட்சி அமைந்துள்ளது.

அண்டா வாய்

அண்டா வாய்

மற்ற நடிகர்களை மரண கலாய் கலாய்த்து பேர் வாங்கிய நடிகர் சந்தானம், டகால்டி படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவை வச்சு செய்திருப்பார் என்பதற்கு இந்த ஒரு சின்ன ஸ்நீக் பீக் சாட்சியாக இருக்கிறது. செக்யூரிட்டியிடம் தீப்பெட்டி திருடும் யோகி பாபுவை, உன் அண்டா வாய வச்சிக்கிட்டு அண்ணாமலை மியூசிக் போட்டதெல்லாம் போதும், மேட்டர் என்னன்னு சொல்லு என சந்தானம் கலாய்த்துள்ளார்.

பழைய சந்தானம்

பழைய சந்தானம்

கவுன்ட்டர் கொடுப்பதில் வல்லவரான காமெடியன் சந்தானம், மீண்டும் டகால்டி படத்தில் திரும்பியுள்ளார் என அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். காமெடி மட்டும் இன்றி, டகால்டி படத்தில் ஆக்‌ஷன் சண்டைக் காட்சிகள் மற்றும் ரொமான்டிக் காட்சிகளும் ஹைலைட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X