ரசிகர்களை காக்க வைக்க விரும்பவில்லை.. டகால்டி டீஸர் அப்டேட் கொடுத்த சந்தானம்!
சென்னை: விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் டகால்டி படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது.
டகால்டி டீஸர் 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது ரசிகர்களை அவ்வளவு நேரம் காக்க வைக்க விரும்பவில்லை, அதற்கு முன்பே டீஸர் வெளியாகும் என்ற அறிவிப்பை சந்தானம் வெளியிட்டுள்ளார்.
காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது, ஹீரோவாக ஆக்ஷன், ரொமான்ஸ் மற்றும் காமெடியிலும் கலக்கி வருகிறார்.

ஷங்கர் சிஷ்யன்
ஷங்கரின் உதவி இயக்குநரான விஜய் ஆனந்த் தான் சந்தானத்தின் டகால்டி படத்தை இயக்கியுள்ளார். ஷங்கரின் எந்திரன் படத்தில் நடித்த சந்தானம், தற்போது ஷங்கரின் சிஷ்யன் படத்தில் ஹீரோவாக கலக்கவுள்ளார்.

ரித்திகா சென்
சந்தானம் தயாரித்து நடித்து வரும் டகால்டி படத்தில், சந்தானத்துக்கு ஜோடியாக மேற்கு வங்க நாயகி ரித்திகா சென் நடித்துள்ளார். காமெடியில் கலக்க யோகி பாபுவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம்
டகால்டி டீஸர் 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது ரசிகர்களை அவ்வளவு நேரம் காக்க வைக்க விரும்பவில்லை, மாலை 4.15 மணிக்கே ரிலீஸ் என்ற அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம்.

டிக்கிலோனா
சந்தானம் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனாலும், தில்லுக்கு துட்டு படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், டகால்டி மற்றும் டிக்கிலோனா என பெரிய பட்ஜெட் படங்களில் சந்தானம் நடித்து வருகிறார். டிக்கிலோனா படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம். நிச்சயம் சந்தானத்தின் அடுத்த இரு படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலா பாலுடன் மோதல்
சந்தானத்தின் டகால்டி டீஸர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இந்த டிசம்பர் மாதமே படமும் ரிலீசாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 20 ஏற்கனவே 3 அல்லது 4 படங்கள் வரிசை கட்டியுள்ள நிலையில், டிசம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ள அமலா பாலின் அதோ அந்த பறவை போல படத்துடன் டகால்டி வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











