கடத்தல் கதையில் காமெடி டகால்டி செய்யும் சந்தானம்.. டகால்டி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Recommended Video

Dagaalty Public Opinion | Santhanam | Rithika Sen | Yogi Babu

சென்னை: ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ள டகால்டி படம் இன்று வெளியாகியுள்ளது.

விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் என ஆல் ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடித்துள்ளார்.

சந்தானம், யோகி பாபு, ரித்திகா சென் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டகால்டி திரைப்படம் குறித்து ட்விட்டர் வாசிகள் என்ன விமர்சனத்தை முன் வைத்துள்ளனர் என்பதை பார்ப்போம்.

கடைசி 20 நிமிஷம்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் உருவாகி வரும் படங்களில் கடைசி 20 நிமிஷம் செம்ம கலக்கலாக இருந்து வருகிறது. இன்று வெளியாகியுள்ள டகால்டி படத்திலும், கடைசி 20 நிமிஷம் செம்ம சூப்பராக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்தே கதையை நோக்கி நகர்வதும், அதனை சுற்றி காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அமைத்திருப்பதும் பிளஸ் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

தல ரசிகர்கள்

நடிகர் சந்தானத்தின் டகால்டி படம் வெற்றியடைய தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தல அஜித்தின் வீரம் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, சந்தானம் தல அஜித்தின் தீவிர ரசிகரும் தான். சந்தானம் படங்கள் வெளியானால், கண்டிப்பாக தல ரசிகர்களின் சப்போர்ட் எப்போதுமே துணையாக இருக்கும்.

சூரி ரசிகர்

ஒரு சூரி ரசிகனா சொல்றேன், டகால்டி படம் நல்லா இருக்கு. சந்தானத்துக்கு ஏ1 படத்துக்கு அப்புறம் இன்னும் ஒரு ஹிட் தான் டகால்டி என இந்த சூரி ரசிகர் மனதார வாழ்த்தியுள்ளார். சந்தானம் மற்றும் சூரி இடையே காமெடியில் போட்டி இருந்த நிலையில், தற்போது சூரி ரசிகர்களும் சந்தானத்தின் டகால்டி படத்தை பாராட்டி வருகின்றனர்.

காமெடி என்டர்டெயினர்

தமிழ் நாட்டில் இருந்து மும்பைக்கு ஒரு பெண்ணை கடத்தி வரும் வேலையில் ஈடுபடுகிறார் சந்தானம். அதனால், அவருக்கு ஏற்படும் சிக்கல், கடைசியில் அந்த பெண்ணை காப்பாற்றினாரா இல்லை தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்தாரா என்பதே டகால்டி படத்தின் கதை. இதனை காமெடி கலந்து காமெடி என்டர்டெயினராக விஜய் ஆனந்த் கொடுத்துள்ளார்.

டகால்டி டிரெண்டிங்

சந்தானத்தின் டகால்டி படம் இன்று ரிலீசாகியுள்ள நிலையில், சந்தானத்தின் ரசிகர்கள் ட்விட்டரில் #DagaaltyFromToday என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். காமெடி படமாக உருவாகியுள்ள டகால்டி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே எழுந்து வருகின்றன. சந்தானத்துக்கு இன்னொரு வெற்றியை டகால்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X