டகால்டி படத்தின் சிங்கிள்.. நாளை ரிலீஸ்... சந்தானத்தின் வெற்றிப் பயணம் தொடருமா

சென்னை: நடிகர் சந்தானம் நடித்து தயாரித்து வரும் படம் தான் டகால்டி .இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியானதை ஒட்டி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சந்தானம் இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் முன்னோட்டத்தில் டிசம்பர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தள்ளி போய் தற்போது தான் படத்தின் முதல் பாடலே வெளியாக உள்ளது .

dagaldi movie single from tomorrow

சந்தானம் நடிப்பை தான்டி படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார். அந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. அதற்கு பிறகு நடிகராய் தனது தயாரிப்பிலே நடித்த படம்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .அதற்கு பிறகு இனிமே இப்படிதான் படத்தையும் தயாரித்து நடித்தார். இரண்டு படங்களுமே திரையரங்குகளில் நன்றாக ஓடினாலும் கலவையான விமர்சனத்தையே அள்ளி தந்தது .

சந்தானம் நடிகரான பின் ஒரு வெற்றியை கூட சுவைக்கவில்லை என்ற விமர்சனம் சந்தானத்தை தொற்றி கொண்டது. அப்போது தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் தான் தில்லுக்கு துட்டு. அந்த படம் வெற்றி தான் சந்தானத்தை ஹீரோவாக நிலைக்க வைத்தது என்று கூறலாம் .

அதற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக நடித்த படம்தான் சக்க போடு போடு ராஜா. ,ஏன் சந்தானம் இப்படி ஆகிவிட்டார் என ரசிகர்கள் அனைவரும் வேதனை படும் அளவிற்கு அந்த படம் இருந்தது. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் நல்ல வெற்றிக்காக சந்தானம் தில்லுக்கு துட்டு படக்குழுவுடன் மீண்டும் இனைந்தார். இம்முறை படத்தை தானே தயாரித்து வெற்றியும் கண்டார். அதற்கு பிறகு ஏ1 படத்தின் வெற்றி சமீபத்தில் கிடைத்தது.

தொடர்ந்து வெற்றி படங்களை நடித்து தயாரித்த பின் வரப்போகும் படம் தான் டகால்டி இந்த படம் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் நாளை சிங்கிள் வெளியாகிறது. சந்தானம் தனது வெற்றி பயனத்தை தொடர்வாரா என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அதனை பொருத்திருந்து பார்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X