twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷூட்டிங் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. எங்களுக்கு வழி சொல்லுங்கள்… தவிக்கும் சினிமா தொழிலாளர்கள் !

    |

    சென்னை : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் இன்றிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    Recommended Video

    ஊரடங்கு மேலும் நீடித்தால் என்ன செய்வது என்பது தெரியவில்லை.. லைட்மேன் ஆ.சிவக்குமார் அலைபேசியில் ஆதங்கம்.

    இதனால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடைசியாக மனைவியை தொட்டுப்பார்க்க கூட முடியாத துயரம்.. அருண்ராஜாவை பார்த்து கலங்கிய நடிகர்கள்! கடைசியாக மனைவியை தொட்டுப்பார்க்க கூட முடியாத துயரம்.. அருண்ராஜாவை பார்த்து கலங்கிய நடிகர்கள்!

    இந்த ஊரடங்கு மேலும் தொடர்ந்தால் எங்களின் நிலை மேலும் மோசமாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    வேகம் எடுக்கும் கொரோனா

    வேகம் எடுக்கும் கொரோனா

    கொரோனாவின் இரண்டாவது ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. பார்க்கின்றன இடமெல்லாம் ஓர் மாயான அமைதி நிலவி வருகிறது. இந்த பெரும் அமைதி கொரோனவை விட அதிக பயத்தையும், தேவையில்லாத மன பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

    முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் விதத்தும் கட்டுப்படாத கொரோனா, அதன் விளையாட்டை தீவிரமாக விளையாடி வருகிறது.இதையடுத்து, கடந்த 10ந் தேதியிலிருந்து 24ந் தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் கேள்விக்குரியாக்கி உள்ளது.

    வாழ்வாதாரம் பாதிப்பு

    வாழ்வாதாரம் பாதிப்பு

    குறிப்பாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், லைட் மேன், எலக்ட்ரிசியன், உணவுத் தயாரிப்பு என நேரடியாகவோ மறைமுகமாகவோ 50 ஆயிரம் பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    மனக்குமுறல்

    மனக்குமுறல்

    இதுகுறித்து, ஆ.சிவக்குமார் என்கிற லைட்மேன், தங்கள் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மனக்குமுறலுடன் கூறியுள்ளார். ஊரடங்கு மேலும் நீடித்தால் என்ன செய்வது என்பது தெரியவில்லை என்றும் தனது ஆதங்கத்தை தொலைப்பேசி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

    பல உதவிகள்

    பல உதவிகள்

    கடந்த ஆண்டு ஊரடங்கின் போது பெப்பி அமைப்பு அந்த அமைப்பின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் உதவிகள் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கினால் மட்டுமே தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை சிரமம் இன்றி இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

    English summary
    Daily wage Workers most affected by the shooting cancellation
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X