டிரோன் ஒலிம்பிக் போட்டியில் 3 பரிசுகள் வென்ற தக்ஷா குழு: தல ரசிகர்கள் ஹேப்பி

By Siva

சென்னை:அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா அணி பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியில் மூன்று பரிசுகள் வென்றுள்ளது.

எம்.ஐ.டி.யை சேர்ந்த தக்ஷா குழுவுக்கு நடிகர் அஜித் குமார் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட தக்ஷா குழு இரண்டாம் இடம் பிடித்தது.

இந்நிலையில் பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியின்போது நடந்த போட்டிகளில் தக்ஷா குழு கலந்து கொண்டது.

தக்ஷா

தக்ஷா

ஏரோ இந்தியா நிகழ்ச்சியின் ஒரு பிரிவாக டிரோன் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் தக்ஷா குழுவுக்கு மூன்று பிரிவுகளில் பரிசு கிடைத்துள்ளது. கலந்து கொண்ட மூன்று போட்டிகளிலும் தக்ஷா குழு பரிசுகள் வென்றுள்ளது.

பதக்கங்கள்

தக்ஷா குழுவுக்கு ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பரிசு பெற்ற அணிகளின் பெயர்கள் ஏரோ இந்தியா ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள்

எங்கள் தல ஆலோசகராக இருந்த தக்ஷா குழு டிரோன் ஒலிம்பிக்ஸில் வெற்றிப் பெற்றுள்ளது என்று அஜித் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.

ஆர்வம்

ஆர்வம்

ஆளில்லா விமானங்களை இயக்குவதில் அஜித்துக்கு ஆர்வம் அதிகம். அதனால் தான் முறையாக படிப்பு இல்லாவிட்டாலும் அனுபவ அறிவு உள்ள அஜித்தை தக்ஷா குழுவுக்கு ஆலோசகராக நியமித்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X