படப்பிடிப்பில் விபத்து.. பிருந்தா மாஸ்டருக்கு காலில் எலும்பு முறிவு.. பதற்றத்தில் படக்குழு!

சென்னை: நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டருக்கு படப்பிடிப்பு தளத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் பிருந்தா மாஸ்டர்.

கடந்த ஆண்டு வெளியான ஹே சினாமிகா படத்தின் மூலம் இயக்குநராகவும் முகம் காட்டினார்.

Dance Choreographer Brinda Master injured her leg during a song shoot

பிருந்தா மாஸ்டர்: காதல் திரைப்படமான ஹே சினாமிகா படத்தைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தின் தக்ஸ் என்கிற தலைப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்கினார். ஹிருது ஹாரூன் நாயகனாக அறிமுகமான இப்படத்தில், பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

நம்மவர் படத்தில்: நடன இயக்குநர், இயக்குநர் என பல பண்முகத் தன்மை கொண்ட பிருந்தா மாஸ்டர், கமல்ஹாசன் சூப்பர் ஹிட் திரைப்படமான நம்மவர் படத்தில் நாகேஷின் மகளாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் நடித்த அந்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பின் திரைப்படங்களில் நடிக்காத பிருந்தா, நடனம், இயக்கம் என மாஸ் காட்டி வருகிறார்.

கண்ணப்பன் திரைப்படம்: தற்போது இவர், தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கண்ணப்பா படத்தில் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பில் விபத்து: இந்த படப்பிடிப்பின் பாடல் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் பிருந்தா மாஸ்டருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் ரமேஷ் பிரபா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிருந்தா மாஸ்டருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதை அடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X