மழையில் ஆட்டம் போட்ட ரச்சிதா..எழுந்து வரியா இல்லையா? கெஞ்சிய ராபர்ட் மாஸ்டர்..பிக்கப் பண்ணிட்டாரா?

சென்னை : கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைத்தபடி விளையாடிக் கொண்டிருந்த ரச்சிதாவை பாசத்துடன் எழுந்து வா என்று ராபர்ட் மாஸ்டர் கொஞ்சி அழைத்துள்ள வீடியோ வைரலாகி உள்ளது.

இந்த முறை பிக் பாஸ் சீசன் 6, நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் குழு கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதனால், இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த சீசனில் அறிமுகம் இல்லாத நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால் ஐந்தாவது சீசன் அவ்வளவாக எடுபடவில்லை. இதனால், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர்

அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு முகம் தான். அவர் வெளியில் தெரிவதற்கு காரணமே வனிதா விஜயகுமார் தான். ராபர்ட் மாஸ்டரும் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக திறமையாக விளையாடி வருகிறார். யாரிடமும் சண்டை போடாமல், அதே நேரம் பிரச்சனை என்றால், அதில் தலையிட்டு பேசி வருகிறார்.

ரச்சிதா மீது க்ரஷ்

ரச்சிதா மீது க்ரஷ்

நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்தே ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா மீது ஒரு க்ரஷ் இருக்கிறது. காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரெண்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரச்சிதாவிடம் பிட்டுபோட்டு வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.

சைட் அடிக்கும் ராபர்ட் மாஸ்டர்

சைட் அடிக்கும் ராபர்ட் மாஸ்டர்

ரச்சிதா எந்த டீமுக்கு சென்றாலும் அந்த டீமுக்கு போவது, ரச்சிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த ரச்சிதா, கடந்த சில நாட்களாக ராபர்ட் மாஸ்டரிடம் பேசி வருகிறார். ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் சைட் அடிக்கும் வீடியோவை பக்காவாக எடிட் செய்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

எழுந்து வரியா இல்லையா?

எழுந்து வரியா இல்லையா?

இந்நிலையில், மழை பெய்து கொண்டிருக்க, கார்டன் ஏரியாவின் தரையில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டு மழையில் நனைத்து கொண்டிருக்கிறார் ரச்சிதா. அப்போது அங்கு குடையுடன் வரும் ராபர்ட் மாஸ்டர், உனக்கு உடம்பு சரியில்லை, நான் சொல்றதை கேளு, சீரியஸா சொல்றேன் எழுந்து வா என கெஞ்சி கெஞ்சி அழைக்கிறார். இதற்கு ரச்சிதா இன்னும் 5 நிமிஷம் என்று சொல்ல, இப்படி சொல்லி சொல்லி அரைமணி நேரம் ஆகிவிட்டது எழுந்து வரியா இல்லையா என அதட்டல் போட்டு அழைக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்டுக்குள்ள என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X