ஆபத்தான நிலையில் நடன இயக்குனர்.. அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்… மகன் வேண்டுகோள் !

சென்னை : மூத்த நடனக்கலைஞரான சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Recommended Video

அப்பா சிகிச்சைக்கு பணம் இல்லை! | Dance Master ShivaShankar மகன் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.

அவரது மகன் அஜய் கிருஷ்ணன் மருத்துவ செலவுக்கு உதவுமாறு சமூக வலைத்தள பக்கத்தில் உதவி கேட்டுள்ளார்.

சிவசங்கர் மாஸ்டர்

சிவசங்கர் மாஸ்டர்

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனர் சிவசங்கர். இவருடைய நடனத்திற்கு இதுவரை யாரும் இணை இல்லை என்று சொல்லலாம். இதுவரை இவர் பத்து மொழிகளில் 800 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார்.

தமிழக அரசின் விருது

தமிழக அரசின் விருது

பூவே உனக்காக, விஸ்வதுளசி, வரலாறு, உளியின் ஓசை போன்ற திரைப்படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடன இயக்குனர் என்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவருடைய பரதநாட்டியமும், அந்த நடன பாவத்தையும் யாராலும் செய்ய முடியாது. அந்த அளவிற்கு அழகாக எடுத்து காட்டுவார்.

பல படங்களில்

பல படங்களில்

சிவகங்கர் நடன இயக்குனராக மட்டும்இல்லாமல் வரலாறு, கண்ணா லட்டு தின்னா ஆசையா, தில்லு முல்லு, அரண்மனை,கஜினிகாந்த், தானாசேர்ந்த கூட்டம் , சர்கார் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

ஆபத்தான நிலையில்

ஆபத்தான நிலையில்

சிவசங்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.

மகன் வேண்டுகோள்

மகன் வேண்டுகோள்

இந்நிலையில், அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தொழில்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவுபவர்கள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X