ஷோபி மாஸ்டருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. திரையுலகினர் வாழ்த்து!

சென்னை : பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி படங்களுக்கு பணியாற்றியவர்கள் ஷோபி மற்றும் லலிதா.

சமீபத்தில் லலிதாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.

நடன இயக்குநர்கள் ஷோபி -லலிதா

நடன இயக்குநர்கள் ஷோபி -லலிதா

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி படங்களில் பணியாற்றி வரும் நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி. கடந்த 2004ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் நடன இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமானார் ஷோப.

பிரம்மாண்ட படங்கள்

பிரம்மாண்ட படங்கள்

திரைத்துறையில் பல முன்னணி நடிகர்களுடனும் பிரம்மாண்டமான படங்களிலும் இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் தன்னுடைய மனைவியுடன் இணைந்து நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இரண்டாவது குழந்தை

இரண்டாவது குழந்தை

இந்நிலையில் லலிதா கர்ப்பமானார். சமீபத்தில் இவருக்கு மிகவும் பிரம்மாண்டமான அளவில் வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் தனியார் மருத்துவமனையில் லலிதாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஷோபி மாஸ்டர் நன்றி

ஷோபி மாஸ்டர் நன்றி

தற்போது தாய் -சேய் இருவரும் நலமாக இருப்பதாக ஷோபி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அன்பும் பாராட்டுக்களும் தெரிவித்த தங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

விஜய் படங்களில் ஷோபி

விஜய் படங்களில் ஷோபி

ஷோபி மாஸ்டர் பல சிறப்பான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். விஜய்யின் மெர்சல், வாரிசு ஆகிய படங்களுக்கும் இவர்தான் நடனம் அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கும் இவர்தான் நடன இயக்குநர். இந்தப் படத்தின் ஜலபுல ஜங் பாடல் பலரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இந்தப் பாடலில் நடன அசைவுகள் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X