நடன இயக்குநரின் அடுத்த அவதாரம்... இயக்குநராக களமிறங்கிய பாபி ஆண்டனி

சென்னை : நடன இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்துள்ளவர் பாபி ஆண்டனி.

இவர் தற்போது புதிய படமொன்றில் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகை ஆன்ட்ரியா நடிப்பில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கயுள்ளது.

நடன இயக்குநர் பாபி ஆண்டனி

நடன இயக்குநர் பாபி ஆண்டனி

நடன இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்துள்ளவர் பாபி ஆண்டனி. இவர் கலகலப்பு, சகுனி, பர்மா, பட்டய கிளப்பணும் பாண்டியா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்பது உள்ளிட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ்நாட்டில் பிறந்தாலும் தன்னுடைய நடனத்தால் இந்திய அளவில் பேசப்படுபவர்.

இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

இவர் தற்போது பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் வழியில் புதிய படத்தில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார். அவரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கவுள்ளது.

ஆண்ட்ரியா லீட் கதாபாத்திரம்

ஆண்ட்ரியா லீட் கதாபாத்திரம்

படத்தின் ஆண்ட்ரியாவுடன் ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பால சரவணன், வினோதினி யுவலஷ்மி உள்ளிட்டவர்கள் படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கவுள்ளார். பாபி ஆண்டனி இயக்கம் மற்றும் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார்.

பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இந்த பூஜையில் ஆண்ட்ரியா, பாபி ஆண்டனி, சுஜாதா விஜயகுமார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த பாபி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா வழியில் பாபி ஆண்டனி

பிரபுதேவா வழியில் பாபி ஆண்டனி

பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என பல்துறை வல்லுநர்களாக மாற்றம் தந்துவரும் நிலையில் தற்போது பாபி ஆண்டனியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். அவருக்கு இயக்கம் கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X