பிரபுதேவாவை இயக்கும் டான்ஸ் மாஸ்டர் ஹரி

பிரபல நடன இயக்குநர் பிரபுதேவாவை வைத்து மற்றொரு நடன இயக்குநரான ஹரிகுமார் "தேள்" என்ற படத்தை இயக்குகிறார்.

By Rajeswari

சென்னை: பிரபல நடன இயக்குநர் பிரபுதேவாவை வைத்து மற்றொரு நடன இயக்குநரான ஹரிகுமார் "தேள்" என்ற படத்தை இயக்குகிறார்

நடன இயக்குநர், இயக்குனர், நடிகர் பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் வெளியான லக்ஷ்மி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் பிரபுதேவா நடித்தால் ரசிகர்களை கவராமல் இருக்குமா என்ன.

Dance master Harikumar directs Prabhu Deva

அந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தேள் என்ற படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. லக்ஷ்மியை போன்றே இதுவும் நடனத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம். அப்படி என்றால் பிரபுதேவா நிச்சயம் பட்டையை கிளப்பிவிடுவார்.

தேள் படத்தை தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற பல படங்களில் நாயகனாக நடித்த பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

மேலும் இந்தப் படத்தை நடிகர் சிவகுமாரின் சொந்தக்காரரான ஞானவேல்ராஜா தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நடன இயக்குநரை வைத்து மற்றொரு நடன இயக்குநர் படம் இயக்குவது சுலபமான விஷயம் அல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X