'கிழிச்சிட்டீங்க' நயன்தாரா படத்தில் நடிகையாக அறிமுகமாகும் பிரபல நடன இயக்குநர்.. என்ன படம்னு பாருங்க!

சென்னை: நடிகை நயன்தாராவின் படத்தில் பிரபல நடன இயக்குநர் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவர் கலா மாஸ்டர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா பெங்காலி, இங்கிலிஷ், ஜப்பனிஸ் என பல மொழி படங்களுக்கு கோரியோகிராஃப் செய்துள்ளார்.

இதுவரை 4000 பாடல்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் கலா மாஸ்டர். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சி

மானாட மயிலாட நிகழ்ச்சி

தேசியவிருது முதல் தமிழக அரசின் விருது வரை ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் கலா மாஸ்டர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமானார்.

கிழிச்சிட்டடா.. டயலாக் பிரபலம்

கிழிச்சிட்டடா.. டயலாக் பிரபலம்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இவர் பேசும், கிழிச்சிட்டடா டயலாக் பெரும் பிரபலமானது. தொடர்ந்து மலையாள மொழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றார்.

நடிகையான கலா மாஸ்டர்

நடிகையான கலா மாஸ்டர்

கலா மாஸ்டர் 2004ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வித்யூத் என்ற மகன் உள்ளார். அரசியலிலும் தீவிரமாக உள்ளார் கலா மாஸ்டர். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் கலா மாஸ்டர்.

விக்கியும் நயனும் கேட்டுக் கொண்டதால்

விக்கியும் நயனும் கேட்டுக் கொண்டதால்

அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் கலா மாஸ்டர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறியுள்ள கலா மாஸ்டர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ்?

ஓடிடியில் ரிலீஸ்?

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X