Ajithkumar: அஜித் செமையா ஆடியிருக்காரு.. குட் பேட் அக்லி பட பாடல் குறித்து கல்யாண் மாஸ்டர் அப்டேட்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகியுள்ள சூழலில் பொங்கல் ரிலீசாக வெளியாகவிருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாதத்தின் துவக்கத்திலோ இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித் ஒரு பாடலுக்கு செமையாக ஆட்டம் போட்டுள்ளதாக கொரியோகிராபர் கல்யாண் மாஸ்டர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

ajithkumar good bad ugly movie kalyan master

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் பொங்கல் ரிலீசாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படும் சூழலில், படத்தின் ரிலீசில் சில பிரச்சனைகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை களைந்து படம் விரைவிலேயே திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படம் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

விடாமுயற்சி படம்: அசர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் காலச்சூழல் காரணமாக படத்தின் சூட்டிங் தாமதமானது. சில மாதங்கள் சூட்டிங் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதனிடையே பொங்கல் ரேஸிலிருந்து படம் விலகியுள்ளது. இந்நிலையில் முன்னதாக பொங்கல் ரிலீசாக அறிவிக்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் ரிலீசும் விடாமுயற்சி படத்தின் ரிலீசையொட்டி தள்ளி வைக்கப்பட்டது. குட் பேட் அக்லி படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

செமையாக ஆடிய அஜித்: இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் பாடல் ஒன்று செம வைப்பாக குத்தாட்ட பாடலாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து தனது தற்போதைய பேட்டியில் பேசியுள்ள கல்யாண் மாஸ்டர் இந்த பாடலில் நடிகர் அஜித்குமார் செமையாக ஆட்டம் போட்டுள்ளதாக உற்சாகம் தெரிவித்துள்ளார். பாடல் குறித்து தற்போது தான் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்துள்ள கல்யாண மாஸ்டர், தான் அப்படி பேசினால் அஜித் ரசிகர்கள் தன்னை வைத்து செய்து விடுவார்கள் என்றும் தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஒட்டுமொத்தமாக கூறினால் விசுவாசம் பட பாணியில் அஜித் இந்த பாடலில் செமையான குத்தாட்டம் போட்டுள்ளதாக அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்: அவரது இந்த பேட்டி அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கியுள்ளது. இந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் அஜித் நடித்துள்ள சூழலில் அதில் ஒரு நெகட்டிவ் ஷேடும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் மிகப்பெரிய கொண்டாட்ட பாடலாக உருவாகியுள்ளதாக கல்யாண மாஸ்டர் தெரிவித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X