Ajithkumar: அஜித்தின் பொறுப்புணர்வு.. கல்யாண் மாஸ்டர் சொன்ன அந்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகின்றது. படத்தில் இருந்து டீசர் மற்றும் சவதிகா என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பாடல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில், நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர், அஜித் குறித்து கூறியுள்ள தகவல் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆன அஜித் அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடித்து வந்தார், சில வாரங்களுக்கு முன்னர் வரை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் என படக்குழு தெரிவித்துள்ளது. ஆனாலும் படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை.

kalyan master ajithkumar sawadeeka vidaamuyarchi

டிரைலர்: இப்படியான நிலையில் படத்தின் டிரைலரை புத்தாண்டு இரவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது தொடர்பாக இணையத்திலும் விடாமுயற்சி ட்ரைலர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. ஏற்கனவே டிரைலர் ரிலீஸ் தேதி என்பது ஜனவரி 1தான் என பேச்சுகள் அடிப்பட்டு வந்த நிலையில், தற்போதே டிரைலர் ரிலீஸ் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் களமிறங்கிவிட்டார்கள். இந்த நியூ இயர் அஜித் ரசிகர்களால் அலறப்போகின்றது என்பது போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

kalyan master ajithkumar sawadeeka vidaamuyarchi

அஜித்: விடாமுயற்சி டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் அஜித் குறித்து தெரிவித்துள்ள தகவல் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது சவதிகா பாடல் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல். நான் அவரை படப்பிடிப்புத் தளத்திற்கு வரவேண்டாம் எனவும், படப்பிடிப்பை ஒத்திவைத்துவிடலாம் எனவும் கூறினேன். மேலும் அவருக்கு இருமலும் அதிகம் இருந்தது. அனைவரும் அவரை ஓய்வு எடுக்கச் சொன்னோம். ஆனால் அஜித் நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை.

kalyan master ajithkumar sawadeeka vidaamuyarchi

பொறுப்புணர்வு: மேலும், 40 டான்சர்ஸ் இருக்காங்க. இவ்வளவு டெக்னிஷன்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, நான் அரைமணி நேரத்தில் வருகின்றேன் எனக் கூறிவிட்டு, மாத்திரை போட்டுக் கொண்டு வந்து, பாடலுக்கு நடனமாடிக் கொடுத்தார்" என கல்யாண் மாஸ்டர் தெரிவித்துள்ளார். அஜித் குறித்து கல்யாண் மாஸ்டர் தெரிவித்த இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

kalyan master ajithkumar sawadeeka vidaamuyarchi
kalyan master ajithkumar sawadeeka vidaamuyarchi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X