Dinesh X Kalyan: அசிங்கம் செய்தது யார்? தினேஷ் மாஸ்டரை வெச்சு விளாசும் கல்யாண் மாஸ்டர்..

சென்னை: கடந்த சில தினங்களாக தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நடன இயக்குநர்கள் சங்கத் தலைவராக உள்ள தினேஷ் மாஸ்டர் மீது நடன இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள். இது தொடர்பாக இருதரப்பு மோதல் சங்கத்தைக் கடந்து ஊடகங்களின் முன்னிலையில் நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் தினேஷ் மாஸ்டர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரை வெளியில் வைத்து தாக்கிய வீடியோவும் இணையத்தில் வெளியானது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்த நிலையில் இந்த பிரச்னை பூதாகரமாக கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக நடன இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கல்யாண் மாஸ்டர் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, " அவர் அடித்தது வீடியோவில் தெளிவாக உள்ளது. ஆனால் சும்மா தட்டிவிட்டேன் என்று கூறுகிறார். நாங்கள் எல்லாம் எல்.கே.ஜி மாணவர்கள் தானே. எங்களுக்கு எதுவும் தெரியாது. எது சொன்னாலும் கேட்டுக் கொள்வோம். எங்களுக்கும் தினேஷ்க்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் கிடையாது.

ஒரு சங்கத்திற்கு அசிங்கம் நடக்கும்போது, தப்பு நடக்கும் போது தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அந்த தவறை தட்டிக் கேட்காமல் விட்டோம் என்றால் அது வேறு யாருக்காவது நடக்கும். அது மிக மிக தவறு. தினேஷ் மாஸ்டர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அதெல்லாம் சொல்ல ஆரம்பித்தால்.. நாங்கள்தான் போகட்டும் போகட்டும் என்று விட்டோம். எனக்கும் தினேஷ் மாஸ்டருக்கும் சண்டை என்கிறீர்கள், ஆனால் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

Dance Master Kalyan Slams Dance Master Dinesh After Dance Masters Union ISSUE
Photo Credit:

அசிங்கம்: சங்கத்தில் நடக்க வேண்டிய விஷயத்தை வெளியே கொண்டு வந்து அசிங்கப்படுத்தியது யார்? எதுவாக இருந்தாலும் சங்கத்தில் வைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் ஏன் வெளியே கூட்டிக்கொண்டு போனீர்கள் என்று கேட்டதற்கு, நான் செய்த வேலைகளை எல்லாம் சொல்ல அழைத்துச் சென்றேன் என்று கூறினார். அதெல்லாம் சரி, எப்படி கேமரா இல்லாத இடமாக பார்த்து அடித்தீர்கள் என்று கேட்டேன், அவர்கள் வீடியோ ஆதாரம் கிடைத்திருக்காது என்று நினைத்திருப்பார்கள். முதலில் சட்டையை மட்டும் பிடித்தேன் என்றவர், ஆதாரத்தைக் காட்டியதும் சும்மா கை வைத்தேன் என்று கூறினார்.

கலாட்டா: அதன் பின்னர் முழு வீடியோ பார்த்த பின்னர், அடித்ததை ஒத்துக் கொண்டார். கடைசியாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். அடுத்து நடைபெறும் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று கூறினார். மேலும் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டாம் என்றும் கூறினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தினேஷ் மாஸ்டர் எடுத்த முடிவைத்தான் நாங்கள் எடுத்தோம். அதை தீர்மானம் நிறைவேற்றி கொண்டுபோய்க் கொடுக்கும் போது, அவர்கள் செய்த கலாட்டா இருக்கிறதே.

லியோ பிரச்னைக்கு ஆதாரம்: குற்றம் எப்போது செய்திருந்தாலும் மன்னித்து விட்டுவிடலாமா? பல வழக்குகள் 5 ஆண்டுகள் எல்லாம் நடக்கிறதே. லியோ பிரச்னைக்கு ஆதாரத்தை நாங்கள் கொடுக்கிறோம். அவரையும் அவரது சகாக்களையும் வரச்சொல்லுங்கள் நாங்களும் வருகிறோம் அவரும் ஒவ்வொரு விஷயமாக பேசட்டும். நாங்களும் பேசுகிறோம். ஆதாரத்தைக் கொடுக்கிறோம்" என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X