நடனபுயலுக்கும் ... மெலடி சிங்கருக்கும் இன்று பிறந்த நாள் !

சென்னை : பிரபு தேவா மற்றும் ஹரிஹரன் இன்று தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் தபாங் 3

இசை பிரியர்களுக்கு இசை தான் உயிர்மூச்சு,டிஜிட்டல் உலகின் வளர்ச்சியில் நாம் இசையை நடனங்கள் வாயிலாக காண துவங்கிவிட்டோம். இந்த வளர்ச்சி சினிமா உருவான காலத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இசையை நாம் அதிகமாக கேட்போம் அதை நல்ல நடனங்களின் மூலம் கண் கூடாக ரசித்து வருகிறோம். சினிமாவை பொருத்த வரையில் ஒரு நல்ல இசையை மக்களிடம் கொண்டு சேர்க்க நல்ல பாடகரும் நடன இயக்குனரும் தேவை .

 Dance Master Prabhu deva, Singer Hariharan are celebrating their birth day

இப்படி இசையின் இருதுருவங்களாக இருக்க கூடிய பாடகர் ஹரிஹரனுக்கும் நடனபுயல் இந்தியாவின் மைக்கெல் ஜாக்ஸன் என்று அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கும் இன்று பிறந்தநாளாகும் .

பிரபுதேவா 90களின் ஆரம்பத்தில் தன் அப்பாவின் நடனகுழுவில் ஆட துவங்கி தனது சினிமா கனவை தொடங்கினார். இதன்பின் பல முக்கிய படங்களில் பாடல்களில் வந்து சென்ற பிரபுதேவா காதலன் படத்தின் மூலம் ஒரு சிறந்த நடனகலைஞராகவும் ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்து கொண்டார் .

பிரபு தேவா சினிமாவின் அத்தனை விஷயங்களை தன் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். இவர் நடன இயக்கம் நடிப்பை தாண்டி 2005ல் இருந்து தற்போது வரை பல படங்களை இயக்கி வருகிறார். மேலும் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் ஹரிஹரன் சிறு வயதில் இருந்தே சிறந்த குரல் வலம் கொண்டவர் இவர் தனது பாடகர் கனவை வெகுசிறிய வயதிலே துவங்கி 1977ல் இருந்தே படங்களில் பாட துவங்கி விட்டார். ஆனால் வெகு தாமதமாக 90களில் தான் தமிழில் பாட துவங்கினார். இதன் பின் இவர் பாடிய ஒவ்வொரு தமிழ் பாடலும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தது .

இவர்கள் இருவருமே பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஹரிஹரன் பாடி பிரபுதேவா நடனமாடி நடித்த 'வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் இன்றும் ரசிகர்களின் இதயம் நெருங்கிய பாடல் என்று கூறலாம் .

 Dance Master Prabhu deva, Singer Hariharan are celebrating their birth day

மேலும் மனதை திருடிவிட்டாய் படத்தில் வரும் 'சடுகுடு ஆடாதே' பாடலாக இருகட்டும் லவ் பேர்ட்ஸ் படத்தில் வரும் 'மலர்களே மலர்களே' பாடலாக இருகட்டும் ஒரு பாடல் வேகப்பாடலாகவும் மற்றொரு பாடல் மெல்லிசையாக இருக்கும். இரண்டையும் சிறப்பாக பாடியிருப்பார் அதை திரையில் உணர்வுகள் குறையாமல் பிரபுதேவா காட்டியிருப்பார் .

இதை தவிர்த்து நடன அசைவுகள் இன்றி முகபாவனைகளில் கலக்க வேண்டிய நிலையில் உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் வரும் 'கவிதைகள் சொல்லவா' பாடலில் ஏற்பட்டிருக்கும் அதையும் சிறப்பாக செய்திருப்பார் பிரபுதேவா. இன்று இருதூண்களுக்கும் பிறந்த நாள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .பிரபு தேவா தனது 47வது பிறந்தநாளையும் ஹரிஹரன் தனது 65வது பிறந்தநாளையும் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X