தி கோட் படத்தில் என்னோட வேலை எல்லாம் முடுஞ்சுது! ஜாலியாக ஊர் சுற்றும் பிரபுதேவா! அந்த ரிலீஸ் தேதி..

சென்னை: நடிகர் பிரபுதேவா தற்போது தமிழ் சினிமா உலகில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவிற்குச் சென்று, அதன் பின்னர் ஹிந்தி சினிமாவில் கோலோச்சிக் கொண்டு இருந்தார். அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் பிரபுதேவா தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக மாறியுள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் பட்டியலில் சிங்காநல்லூர் சிக்னல், பேட்ட ராப், ஜாலியா ஜிம்கானா மற்றும் தி கோட் ஆகிய படங்கள் உள்ளன. இதில் தி கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்தற்கு பிரபு தேவாவும் ஒரு முக்கிய் காரணம் என நடிகர் பிரசாந்த் அண்மையில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Prabhu deva Vijay The GOAT

பிரபு தேவா நடித்துள்ள படங்களில் சிங்காநால்லூர் சிக்னல் படத்தின் ஃபர்ஸ் லுக் படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. அதேபோல் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கின்றார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபு தேவா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அதேபோல் ஜாலியா ஜிம்கானா படத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள மடோனா செபாஸ்டினுடன் இணைந்து நடித்துள்ளார்.

பேட்ட ராப்: இதுமட்டும் இல்லாமல், பேட்ட ராப் படத்தில் வேதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நடனத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் இந்தப் படத்தின் மீது பிரபு தேவா ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பே ஏற்பட்டுள்ளது. அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இதில் சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Prabhu deva Vijay The GOAT

விஜய் 68: இவையெல்லாம் பிரபுதேவா நேரடியாக கதாநாயகனாக நடித்துள்ள படங்கள். இவையில்லாமல் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகுகின்றேன் என அறிவித்த விஜய்யுடன் இணைந்து அவரது 68வது படமான தி கோட் படத்தில் நடித்துள்ளார். படத்தின் கிளிம்ஸ் வெளியிட்டபோது பிரபுதேவா காட்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதேபோல், படத்தின் போஸ்டர்களில் பிரபுதேவா இடம் பெற்றிருந்தார். மேலும் படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோ வெளியானபோதும் பிரபுதேவா, விஜய், பிரசாந்த் ஆகிய மூவரும் ஒரே ஃபிரேமில் இருக்கும் ஸ்டில்களும் இடம் பெற்றிருந்தது.

Prabhu deva Vijay The GOAT

தி கோட் படம் ரிலீஸ்: இந்நிலையில், விஜய் ரசிகர்கள் அனைவரும் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ஆவலாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்ட பேச்சுகளில் தி கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. அப்படி இருக்கும்போது பிரபுதேவா தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் அருவி ஒன்றை மிகவும் மகிழ்ச்சியாக ரசித்துக் கொண்டு உள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு மிகவும் அழகான அருவி என கேப்ஷனும் இட்டுள்ளார். பிரபு தேவாவின் இந்தப் பதிவினால் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதுபோல் தெரிகின்றது. எனவே விரைவில் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் அவலுடன் காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X