சாலை விபத்தில் இறந்த மகன்.. 500 சவரன் நகை, சொத்து போச்சு.. புலியூர் சரோஜாவின் கண்ணீர் கதை!
சென்னை: புலியூர் சரோஜா இந்த பெயரை கேட்டதுமே, ஆடாத கால்களும் ஆடும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர். அவரின் ஒரே மகனும் விபத்தில் இறந்துவிட, 32 ஆண்டுகளாக, அந்த துயரத்தில் இருந்து வெளிவரமுடியாமல் தவித்து வருகிறார். தனக்கு உறுதுணையாக இருந்த காதல் கணவரும் இறந்துவிட புலியூர் சரோஜாவை மீளா துயரில் உள்ளார். அவரின் கண்ணீர் கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட புலியூர் சரோஜாவிற்கு சிறுவயதிலேயே இசை, நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால், படிப்பில் கவனம் செல்லவில்லை. ஆனால் சரோஜாவின் தந்தைக்கு தன்னைப்போல தனது மகளையும் மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், டான்சில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையால் ஏழாம் வகுப்புக்கு மேல் சரோஜாவிற்கு படிப்பில் கவனம் செல்லவில்லை. தனது ஆசையை அப்பாவிடம் சொல்ல, நடனப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அனைவரும் வியந்து பார்க்கும் அளவில் பாட்டுப்பாடி நடனமாடி கவனத்தை ஈர்த்தார்.

புலியூர் சரோஜா: நடனத்தில் கைதேர்ந்த சரோஜாவை, மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்து 'மதன காமராஜன்' திரைப்படக் குழுநடனம் மூலம் படத்தில் அறிமுகமானார். பின் ஜெமினியிலிருந்து விலகி ஜுபிடர் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்திறமையாளர் க்ரூட் டான்ராக இருந்த இவர் டான்ஸ் மாஸ்டராக மாறினார். கஎம்.ஜி.ஆரிடம் அதிக நட்பு வைத்து இருந்த புலியூர் சரோஜா, 80 கால கட்டத்தில், கமல், ரஜினி, பிரபு, சில்க், டிஸ்கோ சாந்தி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த இவர் இப்போது யாருமே இல்லாமல் தனியாக வாழ்க்கை கழித்து வருகிறார்.
மகனே போய்ட்டான்: இவர் நடிகர் ஜி.சீனிவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சத்யா என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். சத்யா விபத்து ஒன்றில் சிக்கி இறந்துவிட உடைந்து போன சரோஜா அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்தார். இதுகுறித்து அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், அந்த நேரத்தில் நான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததால், யார் எங்கே கையேழுத்து கேட்கிறார்களோ அங்கே கையேழுத்து போடுவேன். வளசரவாக்கத்தில் மட்டும் 3 வீடு இருந்தது. 8 ஏக்கர் நிலம், தோட்டம், பண்ணை வீடு, 500 சவரன் தங்க நகை என அனைத்தும் போச்சு. எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து.

எதுவுமே வேண்டாம்: அப்போது தான், மகன் பெயரில் ஸ்கூல் கட்ட வேண்டும் என நினைத்தேன், கையில் இருந்த பணம், நகையை போட்டு அவன் பெயரிலேயே இந்த பள்ளியை கட்டினேன். கடந்த 32 வருடமாக நல்ல படியாக இந்த பள்ளியை நடத்தி வருகிறேன். கடந்த ஆண்டு என் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இப்போ எனக்குனு, இந்த ஸ்கூலைத்தவிர யாரும் இல்லை, என் மகனை நினைத்து, இந்த பள்ளியிலேயே வாழ்த்து வருகிறேன். இந்த ஸ்கூல் ஒன்று தான் என் மனதிருப்தி என கண்ணீருடன் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











